கமுதி அருகே நள்ளிரவில், 100 ஆடுகளை பலியிட்டு, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல் நாடு கிராமத்தில், ஆண்டு தோறும் புரட்டாசி மாதம், மூன்றாவது வாரத்தில், கன்னிப்பெண் அம்மனுக்கு, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும், நள்ளிரவு பூஜை நடக்கும்.
இப்பூஜையில், 100 ஆடுகளை பலியிட்டு, தங்களது வயல்களில் விளைந்த நெல்லை கைக்குத்தல் மூலம் பச்சரிசி எடுத்து, அதை சமைத்து, சாதத்தை உருண்டைக ளாக பிடித்து,
வழிபாடு நடக்கும். நேற்று முன்தினம் நடந்த நள்ளிரவு பூஜையில், பங்கேற்ற ஆண்களுக்கு பச்சரிசி சாதம், அசைவ விருந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.
கமுதி மற்றும் சுற்றியுள்ள, 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
Thanks for Your Comments