கடலூர் தம்பதிக்கு டார்ச்சர் கொடுத்த எஸ்.ஐ !

0
சிதம்பரம் நகரில் கஞ்சித் தொட்டி அருகில் நேற்று முன்தினம் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். 
டார்ச்சர் கொடுத்த எஸ்.ஐ


அப்பொழுது புவனகிரி பகுதியி லிருந்து மனைவி குழந்தை களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித் துள்ளனர். 

அதற்கு அவர், `ஹெல்மெட் அணிந்துள்ளேனே' எனக் கூற, `இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர்தான் வரணும். நீங்கள் ஏன் குழந்தைகளை அழைத்து வந்தீர்கள்' எனக் கேட்க, `என்ன சார் அநியாயமா இருக்கு. 

எங்க குழந்தைகளை நாங்கள் எங்க விட்டுட்டு வர முடியும்' எனக் கேட்டுள்ளனர். அதற்கு போலீஸார், அது உங்க பிரச்னை. இரண்டு பேருக்கு மேல் வரக் கூடாது. 

அது தான் சட்டம்' எனக் கூறி ஆர்.சி புக் கொடு என்கின்றனர். வாலிபர் ஜெராக்ஸ் பேப்பரைக் கொடுக்க, இது சரியா இல்லை. ஒரிஜினல் வேண்டும் என போலீஸார் கேட்கின்றனர். 

சார், நான் புவனகிரி யில் இருந்து வருகிறேன். அதான் ஜெராக்ஸ் வைத்திருக்கேன்ல' எனக் கேட்க, போலீஸார், ஒரிஜினல் புக்தான் வேண்டும் என எகிற இப்படியே இரு தரப்பினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

அங்கிருந்த பொது மக்களும் இவர்களுக்கு ஆதரவாகப் பேசி யுள்ளனர். ஆனால், போலீஸார் எதையும் காதில் வாங்க வில்லை. 


பைக்கில் கணவர் குழந்தை களுடன் வந்த பெண்ணும் பலமுறை சாரி சார் நாங்க குழந்தை களுடன் வந்துள்ளோம். 

இந்த முறை விட்டு விடுங்கள் எனக் கெஞ்சிக் கேட்டும் போலீஸார் அபராதம் விதித்த சம்பவம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியது.

சாதாரண மானவர்களிடம் இப்படி கடுமையாக நடந்துகொண்ட போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

பைக்கில் வந்த வாலிபர் ஹெல்மெட், வண்டிக்கான ஆவணங்களின் ஜெராக்ஸ் என எல்லா வற்றையும் கொடுத்தும், இரண்டு பேருக்கு மேல் ஏன் வந்தீர்கள் எனக்கூறி போலீஸார் அபராதம் விதித்த சம்பவம் பொது மக்களிடம் கடும் அதிர் வலையை ஏற்படுத்தியது.

இது குறித்து சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேய னிடம் பேசிய போது, ``போலீஸார் வாகன தணிக்கையில் இருந்த போது சம்பந்தப்பட்ட நபர் மனைவி, குழந்தை களுடன் வந்துள்ளார், 

அப்பொழுது பணியில் இருந்த போலீஸார் அபராதம் ஏதும் போடாமல் இனி இதுபோல் அதிக நபர்களுடன் மோட்டார் சைக்கிளில் வரக் கூடாது என அவர்களை எச்சரித்து அனுப்பி யுள்ளனர். 

ஆனால், அந்த வாலிபர் வேண்டும் என்றே மீண்டும் வந்து போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது போலீஸார் அவர்களை சமாதானப் படுத்தி மனிதாபி மானத்துடன் அனுப்பி யிருக்க வேண்டும். ஆனால், பணியில் இருந்த காவலர் தேவை யில்லாமல் பேசி பெரிசுப் படுத்தி விட்டார். 
தம்பதிக்கு போலீஸ் டார்ச்சர்


பெண் மற்றும் குழந்தை களுடன் வருபவர்களை நாங்கள் பெரும்பாலும் நிறுத்துதே இல்லை. எப்படி இருப்பினும் அவர்களிடம் போலீஸார் இப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. 

சம்பந்தப் பட்டவர்களை அழைத்து இனி இது போல் நடந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி யுள்ளோம். மேலும், பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோரை கடலூர் ஆயுதப் படைக்கு மாற்றி யுள்ளோம். 

ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை எடுக்காமல் காவல் துறையினர் பணி புரிந்துவரும் நிலையில், ஒரு சிலர் இப்படி நடந்து கொள்வதால் ஒட்டுமொத்த காவல் துறைக்கே அவப்பெயரை ஏற்படுத்தி யுள்ளது. 

காவல் துறைக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் செயல் பட்டுள்ளனர். 

ஒரு தரப்பு வீடியோ மட்டும் வெளியிடப் பட்டுள்ளது. காவல் துறையின் நடவடிக்கை யால் தற்பொழுது பெரும் அளவில் விபத்துகள், உயிரிழப்புகள் குறைந்துள்ளன" என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings