35 கிலோ சில்லறை காசுகள்...ராஜஸ்தானைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவன் தனது தாய்க்கு பிறந்த நாள் பரிசாக 12 ஆண்டுக ளாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமித்த சில்லறை காசுகளை வைத்து பிரிட்ஜ் ஒன்றை வாங்கிக் கொடுத் துள்ளான்.
ஜோத்பூர் அருகே உள்ள சஹரன் நகரைச் சேர்ந்தவர் பப்பு தேவி. இவரது மகன் ராம்சிங் தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறான்.
5 வயது முதல் தனக்கு வீட்டில் கொடுத்த சில்லறை காசுகளை பத்திரமாக சேர்த்து வைத்திருந்தார்.
பப்பு தேவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரிட்ஜ் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தான். இதை யடுத்து தான் சேர்த்து வைத்த சில்லறை களை மூடையாகக் கட்டிக் கொண்டு கடைக்குச் சென்றான் ராம்சிங்.
அவனிடம் மொத்தம் 35 கிலோ எடையில் 13 ஆயிரத்து 500 ரூபாய் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி யடைந்த கடைக்காரர் 2 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தாலும், அதனை தள்ளு படியாக அறிவித்து ராம்சிங்கின் கனவை நனவாக்கினார் கடைக்காரர்.
Thanks for Your Comments