டீன் ஏஜ் பருவத்தினருக்கான பொது அறிகுறிகள் !

0
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று பெண்களின் பருவங்கள் வகைப் படுத்தப் படுகின்றன.
டீன் ஏஜ் பருவம்


அவற்றில் மங்கையும் மடந்தையும் 13 - 19 வயது வரையிலான காலகட்டம். பதின்பருவம் எனப்படும் டீன் ஏஜ் பருவம்.

எது நல்லது, எது கெட்டது என்று முழுமையாக உணர முடியாத, மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய பருவம். தனக்கு மெச்சூரிட்டி வந்து விட்டது,

தனக்கு எல்லாம் தெரியும், யாரும் தனக்கு அட்வைஸ் செய்யத் தேவை யில்லை என்று, டீன் ஏஜ் பெண்கள் வாதம் செய்யும் பருவமும் கூட.

பதின் பருவத்தில் தவறு என உணராமல் டீன் ஏஜ் பெண்கள் செய்யும் சிறுசிறு செயல்கள்கூட பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தலாம்.

டீன் ஏஜ் பருவ அறிகுறிகள்

1 . பள்ளி செயல்திறனில் மாறுதல், திடீரென மதிப்பெண் குறைதல்

2 . தினசரி செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போவது

3 . உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம்

4 . உடல் ரீதியான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுதல்

5 . பள்ளிக்குச் செல்லாமலிருத்தல், திருடுதல், பொருட்களை சேதம் செய்தல், கட்டுப்படாமல் இருத்தல்

6 . உடல் எடை குறித்த மிகுந்த பயம் / பதற்றம்

7 . பசியின்மை மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் கூடிய நீடித்திருக்கும் எதிர்மறை மனநிலை

8 . அடிக்கடி கோபப்படுதல்
பசியின்மை மற்றும் தற்கொலை


9 . கட்டுப்படுத்த முடியாத போதை / குடிப்பழக்கம்

10 . பிடித்த விஷயத்தில் நாட்டமில்லாமல் போவது

11 . குறிப்பிட்ட வயதுக்கு பின்னரும் கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கழித்தல்

12 . திரும்பத் திரும்ப வரும் துன்புறுத்தும் எண்ணங்கள், திரும்பத் திரும்ப கை கழுவுவது மற்றும் சரி பார்ப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் பாடுகள் .

இந்த அறிகுறிகள் எல்லோருக்கும் இயல்பாக இருப்பது போலவே தோன்றக் கூடியவையே.
ரத்த வங்கி’ எப்படி உருவானது?
முதியவர்வேடமிட்டு வெளிநாடு தப்ப முயற்சித்த 32 வயது இளைஞர் !
எப்போது அவை அளவுக்கு அதிகமாகவும் நீடித்தும் காணப்பட்டு, ஒருவரின் தனிப்பட்ட திறனைப் பாதித்து, தினசரி வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதோ,

அப்போது உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசிய மாகிறது. மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தன்னைத் தானே மாற்றி கொள்பவன் தான் மனநலம் வாய்ந்தவனாகக் கருதப் படுகிறான்.

அப்படி மாற இயலாமல் வாழ்க்கை பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போகும் பலவீன மனநிலை கொண்டிருப் பவர்களே பெரும்பாலும் மனநல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 
டீன் ஏஜ் பருவ அறிகுறி


முற்றிய மனநலக் கோளாறால் பாதிக்க பட்டவர்கள் தான் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்பதில்லை. 

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் உடைந்து போகும் தருணங்களிலும் ஆலோசனை பெறுவது அவசியம்.

உடலுக்கு வரும் ஜுரம் போன்ற சிறிய உபாதைக்கு மருத்துவரை அணுகி நலம் பெறுவது போலத் தான் மனதுக்கு பிரச்னை யெனில் மனநல ஆலோசகரை அணுகுவதும்... 

இதை எல்லோரும் உணர்ந்து விட்டால் அதுவே ஆரோக்கியமான மாற்றம் தான். இம்மாற்றத் தினால் ஏற்படும் நல்ல மன ஆரோக்கி யத்தால் நம் மக்களின் திறனும் பல மடங்கு அதிகரிக்கும். மனம் தெளிவாக,

சந்தோஷமாக இருந்தால் மட்டுமே, ஒருவர் தன் முழுத்திறனுடன் செயல்பட முடியும். இதனால் வீட்டில் உறவுகளும் மேம்பட்டு குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும். 

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings