ஊழியர் உறங்கியதால் ஸ்தம்பித்த ரயில்கள் - அதிர்ச்சி நிமிடங்கள் !

0
மேற்கு உத்தர பிரதேசத்தின் பிஜ்னொர் மாவட்டத்தில் உள்ள முர்ஸத்பூர் ரயில்வே நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் உறங்கியதால் அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய பல ரயில்களின் பயணங்கள் தடைபட்டன.
உறங்கிய ஊழியர்


ஏன் எதற்காக ரயில்கள் நிற்கின்றன என்று தெரியாத தால் பயணிகள் மத்தியில் அச்சம் பரவியது.

மதுபோதை?

முர்ஸத்பூர் ரயில்வே நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் தீப் சிங் மதுபானம் அருந்தி மயக்க நிலையில் உறங்கியதாக கூறுகிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.

முர்ஸத்பூர் ரயில்வே நிலையத்தின் கண் காணிப்பாளர் சுக்லா, "பணி நேரத்தில் ரயில்வே மாஸ்டர் உறங்கியதால் அவர் தற்காலிக நீக்கம் செய்யப் பட்டுள்ளார். அவர் மீது துறை சார்ந்த விசாரணையும் தொடங்கப் பட்டுள்ளது" என்றார்.

நின்ற ரயில்கள்
ஸ்தம்பித்த ரயில்கள்


வெள்ளிக்கிழமை இரவு முர்ஸத்பூர் ரயில் நிலையத்தில் தீப் சிங்குக்கு பணி.

ஆனால், அன்று இரவு அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய எந்த தொடர் வண்டிகளு க்கும் சிக்னல் கிடைக்க வில்லை.

இதனால், ரயில்வே ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். ரயில்களும் ஆங்காங்கு நிறுத்தப் பட்டன.

"அந்த மார்க்கத்தில் செல்ல வேண்டிய எந்த தொடர் வண்டிக்கும் சிக்னல் கிடைக்காத தால் நாங்கள் கவலை அடைந்தோம். 

நாங்கள் முர்ஸத்பூர் ரயில் நிலையத்தை தொடர்புக் கொள்ள முயற்சித்தோம். ஆனால், எதுவும் பலனளிக்க வில்லை. நான் முர்ஸத்பூர் ரயில் நிலையத்துக்கு விரைந்தேன். 

அங்கு சென்று பார்த்தபோது, தீப் சிங் அங்குள்ள ஒரு பலகையில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்திய போது, அவர் மது அருந்தியது கண்டறியப் பட்டது" என்கிறார் ரயில்வே கண்காணி ப்பாளர் சுக்லா.
மது அருந்தவில்லை


ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு இது குறித்த தகவல்களை உடனே பகிர்ந்ததாக கூறுகிறார் அவர்.

பல மணி நேர தாமதத்திற்கு பின்பு, அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் ஒவ்வொன்றாக அனுப்பப் பட்டன.

மது அருந்தவில்லை... உடல்நிலை சரியில்லை

ரயில்வே துறை தீப் சிங் மீது நடவடிக்கை எடுத்து அவரை இடை நீக்கம் செய்திருந் தாலும், அவர் தன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார்.

"எனக்கு தொடர் இருமல். அதற்கான மருந்தை எடுத்து வருகிறேன். அன்று எனக்கு இருமல் அதிகமாக இருந்ததால் இருமல் சிரப்பை அதிகமாக அருந்தி விட்டேன். இதன் காரணமாக உறங்கிவிட்டேன். மது அருந்த வில்லை" என்கிறார் தீப் சிங்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings