பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு மாற்ற வேண்டும் !

1 minute read
0
பயன்படாத ஆழ்துளை கிணறு களை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயன்படாத ஆழ்துளை கிணறு


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப் பட்டியில், பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 

அந்தக் குழந்தையை மீட்கும் பணி கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில்,

80 மணிநேர போராட்டட த்திற்குப் பிறகு செவ்வாய் அதிகாலை குழந்தை மரண மடைந்ததாக அறிவிக்கப் பட்டது. 

இதை யடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ள தாவது:


மாநிலம் முழுவதும் பயன்படாத ஆழ்துளை கிணறு களை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும்.

குடிநீர் வடிகால் வாரியத்தை பொறுத்த வரை பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற ஆணை

அதே போல் மாநிலம் முழுவதும் செயல்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக 94458 02145 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 23, March 2025
Privacy and cookie settings