இராக்கில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இராக்கில் ஊழல், வேலை யின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக, போராட்டக் காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தலைநகர் பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி. ஊரடங்கு உத்தரவு பிறப்பித் துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது.
இது குறித்து ஏஎன்ஐ , “பாக்தாத்தின் மத்திய சதுக்கத்தை நோக்கி ஆயிரம் பேர் கலந்து கொண்ட அரசுக்கு எதிரான பேரணியில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 11 பேர் பலியாகினர். பலர் காய மடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வன்முறையில் பலியானவர் களின் குடும்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவித் துள்ளதுடன்
சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதோடு, போராட்டக் காரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஈரான் அரசை வலியுறுத்தி யுள்ளது.
ஐஎஸ் தீவிரவாதி களின் எழுச்சியால் இராக்கில் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது.
இந்நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் தங்கள் படையை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
அங்கு ஐஎஸ் தீவிரவாதி களின் ஆதிக்கம் அதிகமானது. இதை யடுத்து ஐஎஸ் தீவிரவா திகளை ஒடுக்க இராக் நடவடிக்கை யில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து இராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாதி களுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது.
இதில் கடந்த வருடம் இராக் அரசு அமெரிக்கா உதவியுடன் ஐஎஸ்ஸுக்கு எதிரான போர் வெற்றி அடைந்ததாக அறிவித்தது.
இந்த நிலையில் இராக் அரசுக்கு எதிரான போராட்டம் சமீப ஆண்டுகளில் வலுப்பெற்று வருகிறது.
Thanks for Your Comments