அண்மையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிகளை எடுத்துக் காட்டிப் பேசிய நரேந்திர மோதி, தாம் உலக அரங்கில் அப்படிப் பேசியது குறித்து ஐ.ஐ.டி.
விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த போது மீண்டும் சுட்டிக் காட்டினார். கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய விடுதலை நாள் விழா டெல்லி செங்கோட்டையில் நடந்த போது, அதில் பேசிய மோதி 'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
சோப்பு ஒரு சிறப்பு பார்வை !
மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா?
அதற்கு முன் கடந்த 2018 பிப்ரவரி 16-ஆம் தேதி டெல்லி தல்கதோரா உள்ளரங்கில், தேர்வை எதிர் கொள்வது பற்றி பல மாநில மாணவர் களிடையே பேசிய நரேந்திர மோதி,
சம்ஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்பது சிலருக்கு மட்டும் தான் தெரியும் என்றும், மிகவும் இனிமையான அழகான தமிழில் தம்மால் பேச முடியவில்லை என்று வருந்து வதாகவும் தெரிவித்தார்.
பொதுவாகத் தமிழ் நாட்டுக்கு வரும் வட இந்திய தலைவர்கள் வணக்கம், நன்றி போன்ற சொற்களை மேடையில் பேசி கை தட்டல் வாங்குவது வழக்கம்.
ஆனால், சம்ஸ்கிருதம் எல்லா மொழிகளை விட மேம்பட்டது என்று பேசும் இந்துத்துவ முகாமில் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோதி, சம்ஸ் கிருதத்தை விட தமிழ் பழமையானது என்று பேசியதும்,
தொடர்ந்து தமிழை பெருமைப் படுத்தும் வாசகங்களை, மேற்கோள்களை தமது உரையில் இணைத்துக் கொள்வதும் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.
நீட், கீழடி, ஹைட்ரோ கார்பன், இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை போன்ற அடுக்கடுக் கான விஷயங்களில் பாஜக -வை எதிர்த்து தமிழகம் போராடி வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு தழுவிய அளவில் பாஜக பெருவெற்றி பெற்றது. ஆனால், தமிழகம் பாஜக கூட்டணிக்கு மோசமான தோல்வியை அளித்தது.
ஆரஞ்சு பழங்களின் பயன்கள் !
ஆர்டர் செய்த உணவு கேன்சல் எதற்காக - சொமட்டோ பதிலடி !
பிரதமர் மோதி தமிழகம் வரும் போதெல்லாம் `மோதியே திரும்பிப்போ' என்று பொருள்தரும் `GO BACK MODI' ஹேஷ்டேக் பிரசாரம் ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாகிறது.
இந்நிலையில், தொடர்ந்து பிரதமர் மோதி தமிழைப் பெருமைப் படுத்திப் பேசுவது எதைக் குறிக்கிறது? தமிழர்களை சாந்தப்படுத்த விரும்புகிறாரா அல்லது அரசியல் நோக்கமா? இதை தமிழகம் எப்படிப் பார்க்கிறது?
Thanks for Your Comments