மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி, வேலூர் காட்பாடியில் பா.ஜ.க சார்பில் சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர் களைச் சந்தித்த அவர், ``மகாத்மாவின் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட வேண்டுமெனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி யிருக்கிறார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் நாடு முழுவதும் 15 நாள்களுக்குத் தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எம்.எல்.ஏ-க்களோ, எம்.பி-க்களோ இல்லாததால் கட்சி சார்பில் இந்தப் பாத யாத்திரையை நடத்துகிறோம். இந்த தீபாவளியை, `மது' இல்லாத தீபாவளியாக நாம் கொண்டாட வேண்டும்.
ரூ.585 கோடிக்கு மது விற்பனையை இலக்காக நிர்ணயித் துள்ளனர். இளைஞர்கள் மது அருந்த வேண்டாம். குறிப்பாகப் பண்டிகை காலங்களில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு வீடுகளுக்குச் செல்வதை விட சோகம் வேறு எதுவும் இருக்காது.
முரசொலி இடம், பஞ்சமி நிலம் என்றால் அதை மீட்டு உரியவர்களிடம் கொடுக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை வைகோ பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லி விட்டார். தி.மு.க-வினர் வாய்ஜாலம் விடுவதில் அர்த்தம் இல்லை.
வைகோ, தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த பஞ்சமி நிலம் யாருக்கும் சொந்தமானதோ, உரியவர்களிடம் ஒப்படைப்பது தான் தி.மு.க-வின் கடமை என்பதை உணர்த்த வேண்டும்.
இந்த விவகாரம் வெளியே வந்து விட்டது. இனியும், முரசொலி அறக்கட்டளை இடத்தை வைத்திருக்க முடியாது. மிகப்பெரிய போராட்டமாக மாறுவதற்கு முன்பு அதை ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ரஜினி, பா.ஜ.க-வில் சேர வேண்டும் எனக் கடந்த 10 ஆண்டுக ளாகக் கூறி வருகிறேன். ரஜினி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற சிந்தனை உடையவர்.
அப்படிப்பட்ட ஒருவர் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் தனிக்கட்சி ஆரம்பித்தால் கூட நல்லா தான் இருக்கும். முல்லைப் பெரியார் அணை தமிழகத்துக்கு உரிமையானது.
கேரளா சொந்தம் கொண்டாட முடியாது" என்றார். `ரஜினி பா.ஜ.க-வில் இணைந்தாலும், தனிக் கட்சி தொடங்கினாலும் தமிழகத்துக்கு எந்தப் பலனும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.
நீங்கள் சொல்வதைப் போல் ரஜினி பா.ஜ.க-வில் இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப் பிருக்கிறதா?'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த பொன்.ராதா கிருஷ்ணன், ``ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் சரி. ஆரம்பிக்கா விட்டாலும் சரி. காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் என்பதே இல்லை.
ரஜினி பா.ஜ.க-வுக்கு வந்த பிறகு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து முடிவுசெய்வோம்" என்றார்.
Thanks for Your Comments