இன்று விண்வெளி தொழில் நுட்பங்கள் பெருமளவில் மேம்பட்டு விட்டன. செவ்வாய்க்கு கலன் அனுப்புகிறோம், தூரக் கிரகங்களைக் கண்காணிக் கிறோம்.
ஆனால் இன்று வரை ஒன்று மட்டும் நடக்காமலேயே இருந்தது.
வெறும் பெண்களை உள்ளடக்கிய குழு விண்ணில் மிதந்ததில்லை (Space Walk) என்பது தான் அது.
வெறும் பெண்களை உள்ளடக்கிய குழு விண்ணில் மிதந்ததில்லை (Space Walk) என்பது தான் அது.
விண்ணில் கலன்களைப் பழுது பார்ப்பது, பேட்டரிகள் மாற்றுவது போன்ற வற்றைச் செய்ய விண்கலத்தை விட்டு வெளியே வரவேண்டியது இருக்கும்.
இப்படி வெளியே வருவதைத் தான் 'ஸ்பேஸ் வாக்' என்று அழைப்பர்.
இப்படி வெளியே வருவதைத் தான் 'ஸ்பேஸ் வாக்' என்று அழைப்பர்.
ஆம் 1965-ல் முதல் மனிதராக அலெக்ஸி லியோனோவ் விண்ணில் மிதந்ததி லிருந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு ஆண் துணை இல்லாமல் விண்ணில் பெண் எவரும் இந்த Space Walk-ஐ செய்ததில்லை.
இந்த வரலாறு இன்று மாறி யிருக்கிறது. கிறிஸ்டினா கோச், ஜெஸ்ஸிகா மேயர் ஆகிய இரு விண்வெளி வீராங்கனைகள் கொண்ட குழு இன்று இதை உடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஸ்பேஸ் வாக்' சற்றுமுன் தொடங்கியது. இரு வீராங்கனை களும் சர்வதேச விண்வெளி நிலையத்தி லிருந்து அகண்ட விண்வெளியில் அடியெடுத்து வைத்தனர்.
பல வருடங்களாக நாசா இதைச் செய்ய வேண்டும் என்று திட்ட மிட்டுவந்தாலும் இன்று தான் அந்த நாள் கைகூடி வந்திருக்கிறது.
இதுவும் ஒரு சிறிய கோளாறின் காரணமாக பேட்டரி சார்ஜர் ஒன்றை மாற்ற வேண்டும் என்பதால் தான் இது இன்று நடந்திருக் கிறது, இல்லை யென்றால் ஒரு வாரம் இதற்காகக் காத்திருக்க வேண்டிய தாக இருந்திருக்கும்.
இதில் ஜெஸ்ஸிகா மேயருக்கு இது முதல் 'ஸ்பேஸ் வாக்'.
இதன் மூலம் விண்ணில் மிதந்த 228-வது மனிதரானர் இவர், இதைச் செய்த 15-வது பெண் இவர்.
இதன் மூலம் விண்ணில் மிதந்த 228-வது மனிதரானர் இவர், இதைச் செய்த 15-வது பெண் இவர்.
கிறிஸ்டினா கோச்சுக்கு இது 4-வது ஸ்பேஸ் வாக். இவர் தற்போது 11-மாத மிஷன் ஒன்றில் இருக்கிறார்.
இதற்கு முன்பு எந்தப் பெண்ணும் இவ்வளவு காலம் ஒரு மிஷனில் இருந்த தில்லை.
இதற்கு முன்பு எந்தப் பெண்ணும் இவ்வளவு காலம் ஒரு மிஷனில் இருந்த தில்லை.
நாசா தலைவர்கள் மற்றும் உலக மக்கள் பலரின் ஆதரவோடும் இவர்கள் விண்ணில் மிதக்கும் இந்த நிகழ்வை முழுவதுமாக லைவ் ஸ்ட்ரீம் செய்து வருகிறது நாசா.
விண்வெளி என்றில்லாமல் ஒட்டு மொத்த பெண் சமூகத்துக்குமே இது ஒரு மாபெரும் மைல் கல்லாகக் கருதப் படுகிறது.
Tune in to watch the first #AllWomanSpacewalk! Starting at approximately 7:50 a.m. EDT on Friday, Oct. 18, NASA...
Posted by NASA - National Aeronautics and Space Administration onFriday, October 18, 2019
Thanks for Your Comments