ப்பா.. உலக மகா நடிப்புடா சாமி.. ஆஸ்கர் விருது நிச்சயம் !

1 minute read
0
மனிதர்களுக்குத் தான் ஆறு அறிவு, விலங்குகளுக்கு ஐந்து அறிவு தான் என நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சமயங்களில் மனிதர்களைப் போலவே எங்களுக்கும் ஆறு அறிவு இருக்கிறது என காட்டி விடுகின்றன சில விலங்குகள்.
ப்பா.. உலக மகா நடிப்புடா சாமி.. ஆஸ்கர் விருது நிச்சயம் !


தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவும் அப்படிப்பட்டது தான். இதில் குதிரை ஒன்று சவாரிக்கு செல்லப் பிடிக்காமல், மயங்கி, செத்து விழுவது போல் நாடகமாடுகிறது. 

வேலை செய்யப் பிடிக்காமல் ஏமாற்று வதற்காகத் தான் இந்தக் குதிரை இப்படி செய்கிறது என்ற போதிலும், அதன் புத்தி சாலித்தனம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

நாம் சிறு வயதில் வேலை செய்யப் பிடிக்காமல் காது கேளாமல் நடிக்கும் நாய், உப்பு மூட்டையை தண்ணீரில் கரைக்கும் கழுதை போன்ற கதைகளைக் கேள்வி பட்டிருப்போம். 

அவற்றை எல்லாம் நிஜம் என நிரூபிப்பது போல் இருக்கிறது இந்தக் குதிரையின் நடவைடிக்கை.

சவாரிக்கு ஆட்கள் மேலே ஏறி அமர்ந்தால், உடனே மயங்கி கண்கள் செருகிக் கொள்ள பொத்தென செத்து வீழ்வது போல் கீழே விழுந்து விடுகிறது இந்த குதிரை. 


பிறகு ஆட்கள் நகர்ந்து சென்றதும் எதுவுமே நடக்காதது போல் திரும்பவும் ஓடியாடி விளையாடத் தொடங்கி விடுகிறது.

இந்த வீடியோ எந்த நாட்டில், எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரிய வில்லை. ஆனால் சமூக வலை தளங்களில் தற்போது இது வைரலாகி உள்ளது. 

சிலர் இந்தக் குதிரை போல் நடிக்காமல் ஒழுங்காக வேலை செய்யுங்கள் என்றும், வேறு சிலரோ இந்தக் குதிரையைப் பார்த்து கத்துக் கோங்கப்பா என வேடிக்கை யாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை சுமார் 23 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வை யிட்டுள்ளனர்.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 11, April 2025
Privacy and cookie settings