சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில்
மாலை அணிந்து மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் சென்று அய்யப்பனை தரிசிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் காக கடந்த 16ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப் பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலை கோவிலின் நடை, சூரிய கிரகணத்தை முன்னிட்டு 26-ம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், வரும் 26ம் தேதி காலை 8.13 மணி முதல் 11.13 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது.
இதனால் சபரிமலை கோவிலின் நடை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை 4 மணி நேரம் அடைக்கப்படும் என தெரிவித்் துள்ளது.
Thanks for Your Comments