ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். டேவிட் வார்னர் இன்று தனது வீட்டில் தனது 3 வயது மகளுடன் கிரிக்கெட் விளையாடினார்.
இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்.
இந்த வீடியோவில் டேவிட் வார்னரின் மகள் இன்டி மே, நான் விராட் கோலி என்று கூறிவிட்டு பந்தை அடிக்கும் போல் காட்சி பதிவாகி யுள்ளது.
இந்த வீடியோவில் டேவிட் வார்னரின் மகள் இன்டி மே, நான் விராட் கோலி என்று கூறிவிட்டு பந்தை அடிக்கும் போல் காட்சி பதிவாகி யுள்ளது.
அதே போல தனது தந்தை டேவிட் வார்னரை போல் விளையாடியும் காட்டுகிறார்.
இந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “எனக்கு இது பற்றி சரியாக தெரியாது.
இன்டி விராட் கோலி போல் ஆக வேண்டுமாம்” என எழுதியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.
Thanks for Your Comments