விஷவாயு தாக்கத்திலிருந்து தப்பிக்க - தீயணைப்பு துறை பயிற்சி !

1 minute read
0
கழிவுநீர் தொட்டியை மனிதர்களை கொண்டு சுத்தம் செய்வது சட்ட விரோதம் எனக் கூறியிருக்கும் தீயணைப்புத் துறை, விஷவாயு தாக்குதலி லிருந்து தப்பிக்க, 
விஷவாயு


லாந்தர் விளக்குகளை கொண்டு கண்டறியும் நுட்பங்கள் உள்ளிட்ட வழிமுறை களையும் கூறி யிருக்கிறது.

கழிவுநீர் தொட்டியை மனிதர்களை கொண்டு சுத்தம் செய்யக் கூடாது என்ற விதி இருந்தும், அதையும் மீறி, ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்க ளால், விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. 
கழிவுநீர் தொட்டி


இவ்வாறு விஷவாயு தாக்குதலி லிருந்து தற்காத்து கொள்வதற் கான வழிகாட்டு தல்களை தீயணைப்புத் துறை வழங்கி யிருக்கிறது.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு இருக்கிறதா? என்பதை, லாந்தர் விளக்கு உள்ளிட்ட நுட்பங்கள் மூலம் கண்டறியலாம் என தீயணைப்புத்து றை கூறி யிருக்கிறது. 
லாந்தர் விளக்கு உள்ளிட்ட நுட்பங்கள்


கழிவுநீர் தொட்டியில் இறங்கியவர் விஷவாயுவால் தாக்கப்பட்டு நிலை குலைந்தால், அதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், 

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நேரடி மீட்பு பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் தீயணைப்புத் துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.

பெரிய நிறுவனங்கள் உட்பட அனைவரும், எந்திரங்கள் மூலமே கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், மனிதர்களை ஒரு போதும் ஈடுபடுத்தக் கூடாது தீயணைப்புத் துறை அறிவுறுத்தி யிருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 22, March 2025
Privacy and cookie settings