சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்ட்டேக் எனும் மின்னணு அட்டை முறை அமல் படுத்தப்பட உள்ளது.
இதன்படி வாகன உரிமை யாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சாவடிகளி லும் பாஸ்ட்டேக் முறை அமல் படுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே, வரும் 1-ம் தேதி முதல் இந்த பாஸ்ட்டேக் முறை கட்டாயம் அமல் படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித் திருந்தது.
இந்நிலையில், பாஸ்ட்டேக் மின்னணு அட்டை பெறுவதற் கான கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
Thanks for Your Comments