வீட்டுவாசலில் தலைவாரிய பெண் - நடந்த சோக சம்பவம் !

1 minute read
0
வீட்டு வாசலில் உட்கார்ந்து தலை வாரி கொண்டிருந்த பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதால், அந்த பெண் தூக்கிட்டு த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
வீட்டுவாசலில் தலைவாரிய பெண்


தேனி மாவட்டம், லட்சுமிபுரம் அருகே சருத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்.

இவரின் மனைவி கிருஷ்ணவேனி. இவர்கள் வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், இவர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் சந்திரனுக்கும், எப்போதும் ஆகாதாம். எதாவது சொல்லி சண்டை ஆரம்பித்து விடுவாராம்.

இப்படிதான் சம்பவத்தன்று கிருஷ்ணவேனி அவரின் வீட்டு வெளியில் உட்கார்ந்து தலையை வாரிக் கொண்டிருந் திருக்கிறார். அப்போது பக்கத்து விட்டுக் காரர் சந்திரன் வெளியேபோக கிளம்பி வந்துள்ளார்.

எப்போதும் சகுனம் பார்க்கும் சந்திரன் அந்த பெண்ணை கண்டதும், நான் இப்படி வெளியே செல்லும் நேரத்துல தான் தலையை விரிச்சு சீவணுமா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு, அந்த பெண் என் வீட்டு வாசலில், என் தலையை சீவுனா உங்களுக்கு என்ன என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், ஆபாசமாக கிருஷ்ண வேனியை பேசியது மட்டு மில்லாமல், அடித்தும் உள்ளார்.

மேலும், கையை பிடித்து தரதரவென இழுத்து போட்டு தாக்க ஆரம்பித்து விட்டார். இந்த கூச்சல், சண்டையி னால் அக்கம் பக்கம் வீட்டினர் திரண்டு வந்து விட்டனர்.


சந்திரனை கடுமையாக எச்சரிக்க ஆரம்பித்ததும், அவர்களிடம் தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்து விருட்டென கிளம்பி போய் விட்டார்.

அதைத் தொடர்ந்து கிருஷ்ண வேணிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனே தன் கணவனுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி அழுதுள்ளார்.

அதன் பின்னர் கிருஷ்ணவேணி, சந்திரன் அடித்தது, அவமான படுத்தியது எல்லாம் நினைத்து அவமானம் தாங்க முடியாமல் தூக்கு மாட்டி த ற் கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசாரு க்கு தகவல் சொல்லப்பட, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, தூண்டியதாக சந்திரனை கைது செய்தனர்.

மூட நம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா என்றும், தான் வீட்டு வாசலில் தலை சீவிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு நபர் தாக்கிய தாலும்,

அதனால் ஏற்பட்ட விபரீதத்தையும் நினைத்து அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings