சுவிஸில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம் !

0
சுவிட்சர்லாந்து வங்கிகளில் செயல்பாடற்ற நிலையில் இருக்கும் சுமார் 10 இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உரிமை கோராமல் இருக்கும் பணம்


சுவிட்சர்லாந்து வங்கிகளில் கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவைச் சேர்ந்தவர் களின் 10 கணக்குகள் உள்பட 2 ஆயிரத்து 600 வங்கிக் கணக்குகள் செயல்பாடற்ற நிலையில் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இந்த கணக்குகளில் இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய் உள்ளதாகவும் கொல்கத்தா, மும்பையைச் சேர்ந்தவர் களின் தலா இரண்டு கணக்குகள், டேராடூனைச் சேர்ந்த 

ஒரு வங்கி கணக்கு என 10 இந்தியர் களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை எ‌ன கூறப்படு கிறது.


இதில் பணத்தை உரிமைக் கோரு‌வதற் கான காலக்கெடு, இருவருக்கு வரும் 15-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. நிர்ண யிக்கப்பட்ட காலக்கெடு வுக்குள்

உரிய ஆவணங் களுடன் பணத்திற்கு உரிமை கோரவில்லை யெனில் அப்பணம் சுவிட்சர்லாந்து அரசுக்கு சொந்தமானதாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings