குறைந்த வேலை, அதிக சம்பளம் - பட்டதாரிகள் பேட்டி!

0
நாட்டில் வேலை யில்லா திண்டாட்டம் எந்த அளவிற்கு தலை விரித்தாடு கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் 
குறைந்த வேலை, அதிக சம்பளம்

கோவை மாநகராட்சி அலுவலக த்தில் நேற்று நடந்த துப்புரவு பணியாளர் வேலைக்கான நேர் காணலுக்கு படித்த இளைஞர்கள் ஏராளமான பேர் வந்திருந்ததனர். 

நேர்காணலு க்கு ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் களும் வந்திருந்தனர்.

அதிலும் பட்டதாரிகளும் வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து பட்டதாரிகள் கூறியதாவது:-

நாங்கள் படித்த படிப்புக்கு தகுந்த வேலை இல்லை. வேலை கிடைக்காத காரணத்தினால் இந்த வேலைக்கு வந்துள்ளோம்.

எங்களுக்கு தனியாரில் மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் தான் சம்பளம் தருகிறார்கள்.

சில இடங்களில் அந்த சம்பளம் கூட கிடைப்ப தில்லை. 

அதுவும் 10 மணி நேரம், 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இரவு ஷிப்டும் வரும். வேலை நிரந்தரம் இல்லை.

ஆனால் துப்புரவு வேலையில் சேர்ந்த வுடனேயே ரூ.20 ஆயிரம் கொடுக்கிறார்கள். 
காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் தான் வேலை. மற்ற நேரங்களில் வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம். எல்லா வற்றிற்கும் மேலாக இது அரசாங்க நிரந்தர வேலை. 

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. தேவைப்படும் போது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இந்த வேலை கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings