விசாரணையின் போது ஸ்ரீவில்லி புத்தூர் மகளிர் விரைவு நீதி மன்றத்தில் கடந்த 18-ஆம் தேதி நிர்மலா தேவி ஆஜராகாத தால், ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது.
அவருடைய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “பிடிவாரண்ட் தகவலைக் கூட நிர்மலா தேவியிடம் தெரிவிக்க முடிய வில்லை. தொடர்பு கொள்ளவே முடிய வில்லை.
கடத்தப் பட்டிருப்பாரோ?'' என்று முதலில் சந்தேகம் எழுப்பினார். அதன் பிறகு அவரால் நிர்மலா தேவியை தொடர்பு கொள்ள முடிந்திருக் கிறது.
25 ஆம் தேதி ஸ்ரீவில்லி புத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ‘சரண்டர்’ ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அன்று காலை நீதிமன்றத்தில் அவர் காத்திருந்தார்.
அதற்குள் நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து அந்நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரிமளா உத்தர விட்டார்.
மீண்டும் சிறை என்பதால் நீதிமன்றத்தி லிருந்து வெளியேறிய நிர்மலாதேவி கண்ணில் நீர்மல்க காவல்துறை வாகனத்தில் ஏறினார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், "தமிழக அரசும் காவல் துறையும் தான் நிர்மலா தேவிக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன என்பதை முதலிலிருந்தே கூறி வருகிறேன்.
இப்பகுதியின் அமைச்சர்கள் இருவரில் ஒருவரின் பெயரைச் சொல்லிக் தான் நிர்மலா தேவியை மிரட்டி யிருக்க றார்கள்.
கடந்த சில நாட்களாக இவரைக் கடத்தி வைத்திருந் தார்களா? அல்லது சி.பி.சி.ஐ.டி. போலீசாரே தங்கள் கஸ்டடியில் வைத்திருந் தார்களா என்பது தெரிய வில்லை.
ஒரு பக்கம், இந்த வழக்கில் நிர்மலா தேவி ஒழுங்காக ஆஜராகக் கூடாது என்ற மிரட்டல் இருக்கிறது. இன்னொரு பக்கம், "நாங்கள் செல்வதைத் தான் செய்ய வேண்டும்' என்று மிரட்ட கிறார்கள்.
நிர்மலா தேவி மன அழுத்தத் தால் பாதிக்கப் பட்டிருப்ப தால், அவர் கூறுவதை என்னால் புகாராக கொடுக்க முடிய வில்லை.
இன்றைக்கு திடீரென்று ரிமாண்ட். ரீகால் பெட்டிஷனைக் கூட அனுமதிக்க விடாமல் கைது பண்ணி ஜெயிலுக்கு கொண்டு போயிட்டாங்க.
திரும்பவும் இது சட்டப் போராட்டமாக வந்து கொண்டிரு க்கிறது. நிர்மலா தேவி வழக்கின் பின்னால் இருக்கின்ற அரசியல் பின்னணி வெகு விரைவில் உடைக்கப்படும்.
அமைச்சரின் மிரட்டல் உண்டு என்ற உண்மை ஓரளவு எனக்கும் தெரியும். அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
அமைச்சர் பாதி நாட்கள் சாமியார் வேஷம் போடுவார். பாதிநாட்கள் தாடி வைத்திருப்பார்'' என்றார்.
Thanks for Your Comments