கள்ளக் குறிச்சியை புதிய மாவட்டமாக நேற்று துவக்கி வைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசாக தலா 1,000 ரூபாய் வழங்கப்படும்.
அரிசி ரேசன் அட்டை வைத்திருப் போருக்கு இந்த தொகை வழங்கப்படும்.
மேலும் பொங்கல் வைப்பதற் கான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை யுடன் கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவ தற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கு ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கப் பட்டிருப்ப தாக அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக் காக இந்தாண்டும் ரூ.1,000 தரப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில் அரசாணை வெளியாகி யுள்ளது.... மாலைமலர் ..
Thanks for Your Comments