சத்தீஷ்காரில் நக்சல் ஒழிப்பு காவல் முகாமிற்கு எதிர்ப்பு !

1 minute read
0
சத்தீஷ்காரில் கடந்த வருடம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து பூபேஷ் பாகேல் முதல் மந்திரியானார். 
நக்சல் ஒழிப்பு முகாமிற்கு எதிர்ப்பு


சத்தீஷ்காரில் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளன.

அவர்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதுடன் மக்களை யும் அச்சுறுத்தி வருகின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் கூட சில தொகுதிகளில் நக்சலைட்டுகள் போஸ்டர் களை ஒட்டி ஓட்டுப்பதிவை புறக்கணிக் கும்படி கூறி பொது மக்களை மிரட்டினர்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் நக்சலைட்டு களின் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்  பட்டார். அவரது வாகனமும் வெடித்து சிதறியது. 

உடன் பாதுகாப்பு பணியில் சென்ற வீரர்களும் கொல்லப் பட்டனர். இந்நிலையில், நக்சலைட்டு களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. 


இதன்படி, தன்டேவாடா நகரில் பொடாலி என்ற கிராமத்தில் புதிய போலீஸ் முகாம் ஒன்று அமைக்கப் பட்டது.

ஆனால் இதனை வரவேற்பதற்கு பதிலாக கிராமத்தினர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது பற்றி தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சென்று அவர்களை அமைதிப் படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நக்சலைட்டுகள் கொடுத்த அழுத்தத்தி னால் கிராமத்தினர் இது போன்ற போராட்ட த்தில் ஈடுபட்டு உள்ளனர். 

அவர்கள் முகாம்களை முற்றுகையிட முயன்றனர். இதன் பின்பு கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அவர்களை கலைத்தனர் என்று தன்டேவாடா எஸ்.பி.யான அபிசேக் பல்லவா கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 27, March 2025
Privacy and cookie settings