தமிழகத்தில் மருத்துவ மனைகளில் வரும் நோயாளி களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப் படுவது இயல்பு.
ஆனால் தற்போது நோயாளி களுக்கு ஊசி போடும் போது அவர்களின் உடலுக்குள் ஊசி ஒடிந்து புகுந்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இது தமிழக சுகாதார நலத்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. எனவே கடந்த சில நாட்களுக்குள், ஊசி ஒடிந்த 5 சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த சுகாதார நலத்துறை உத்தர விட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், அரசு மருத்துவ மனைகளுக்கு வினியோகம் செய்யப்படும் ஊசியின் தரம் எப்படிப் பட்டது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்ட போது, ஊசி ஒடியும் சம்பவங்கள் எப்போதாவது நிகழ்வதுண்டு.
ஆனாலும் அடிக்கடி இது போன்ற சம்பவம் நடப்பதால், அதை விசாரணைக்கு உட்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப் புளியில் நடந்த சம்பவம் தொடர்பாக, நோயாளிக்கு ஊசி போட்ட செவிலியர் இடைக்கால பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
மற்ற இடங்களிலும் விசாரணைக்குப் பிறகு, எப்படி தவறு நடந்தது?, பணியில் அஜாக்கிரதை யாக இருந்தது யார்? என்பது போன்ற விவரங்கள் தெரிய வந்தால்,
சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இது குறித்து பீலா ராஜேஷ் மேலும் கூறியதாவது:-
தமிழகத்தில் நகரங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகள், சிரிஞ்ச் என்று அழைக்க ப்படும் ஊசிகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திடம் வாங்குகின்றன.
ஊசிகளை வாங்குவதற்கு டெண்டர் விட்டு தனியாரிடம் இருந்து அவற்றை மருத்துவ சேவைக்கழகம் பெறுகிறது.
தற்போது ஊசி ஒடியும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், வாங்கப்படும் ஊசிகளின் தரம் பற்றி விசாரணை நடத்தவும், சோதனை செய்யவும் மருத்துவ சேவைக் கழகத்துக்கு உத்தர விடப்பட டுள்ளது.
அரசு மருத்துவ மனைகளு க்கு அளிக்கப்படும் ஊசிகளின் இருப்பு மற்றும் தரம் பற்றி மருத்துவ சேவைக்கழகம் ஆய்வு செய்யும். ஊசியின் தரத்திலோ அல்லது
ஊசியின் வகையிலோ மாற்றம் செய்ய வேண்டும் என்று மருத்துவ சேவைக் கழகம் கேட்டுக் கொண்டால், அதற்கேற்ற நடைமுறை களை சுகாதாரத் துறை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவங்கள் குறித்து அரசின் சில மூத்த டாக்டர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
நோயாளிகளின் தசையின் தடிமன், உடல் எடை ஆகியவை வேறு பட்டிருக்கும். எனவே அதற்கேற்ற வகையில் ஊசிகளை தேர்வு செய்து செலுத்துவது அவசியம்.
இதற்காக சிறிது, நடுத்தரம், பெரிது ஆகிய 3 வகைகளில் ஊசிகள் உள்ளன. ஊசியின் தடிமன் சிறியதாகவும்,
ஆனால் அதே நேரத்தில் நோயாளியின் தசை அதை விட கெட்டி யானதாக இருந்தால், தசைக்குள் ஊசி ஒடிந்து தங்கிவிட வாய்ப்பு அதிகம். ஊசி போடும் நடவடிக்கை சாதாரணமான தல்ல.
அதற்கு தேவையான வெளிச்சம் இருக்க வேண்டும். ஊசி போடுவதற்கு ஏதுவான மேஜை இருக்க வேண்டும்.
அது, ஊசி போடும்போது நோயாளியின் உடல் அசைவை கட்டுப்படுத்த வதாக இருக்க வேண்டும். ஆனால் பெரும் பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட இந்த வசதிகள் இல்லை.
மருத்துவ சேவைக்கு தேவையான வசதிகளும், உபகரணங் களும் இருப்ப தில்லை என்பதை அரசு டாக்டர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தான் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பதற்கு காரணமாக உள்ளது.
இது போன்ற விவகாரங்களில் மருத்துவ அலுவலர்களின் கவனக் குறைவு என்ற ஒரு குற்றச் சாட்டை மட்டும் கூறுவ து தவறு. வேறு பிரச்சினைகளும் இருக்கலாம்.
மருத்துவ சேவைக்கழகம் வாங்கி வினியோகிக்கும் ஊசிகள், மருந்துகள், உபகரணங்கள் போன்றவை தரம் குறைந்ததாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது.
ஊசிகளை உபயோகிப் பதற்கு முன்பு ஊசிகளின் தரத்தை மருத்துவ அலுவலர்கள் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Thanks for Your Comments