கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நிறுவனம், துாக்கத்தை பற்றிய தங்கள் ஆராய்ச்சிக் காக, 100 நாட்களுக்கு,
தினமும், ஒன்பது மணி நேரம் துாங்க தயாராக இருப்பவர் களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் தர உள்ளதாக அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த 'வேக்பிட் இனொவேஷன்ஸ்' என்ற புதிய நிறுவனம், துாக்கத்தைப் பற்றிய ஆராய்ச்சி களை செய்து வருகிறது.
இவர்கள் புதிதாக செய்ய உள்ள ஆராய்ச்சிக் காக, துாக்கத்தின் மீது, தீராத காதல் கண்டவர் களை தேடிக் கொண்டிருக் கிறது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனரும், நிறுவனர்களில் ஒருவருமான, சைதன்யா ராமலிங்க கவுடா, செய்தியாளர் களிடம் கூறியதாவது:
வாழ்க்கை மற்றும் வேலை, இரண்டையும் சரியான விகிதத்தில் நிர்வகிப்பதன் மூலம், நம் உடல் ஆரோக்கிய த் தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து,
ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம். இதற்காக, ஆழ்ந்து உறங்க கூடிய, துாக்கத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள், நிறைய பேர் தேவை படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் க்கு, எங்கள் நிறுவனம் சார்பில், படுக்கை ஒன்று அளிக்கப்படும். அவர்கள், வழக்கம் போல தங்கள் அலுவலக வேலைகளை செய்யலாம்.
தினமும் இரவில், நாங்கள் கொடுத்த படுக்கையில் படுத்து உறங்க வேண்டும். குறைந்த பட்சம், ஒன்பது மணி நேரமாவது உறங்க வேண்டும்.
இரவு படுக்க போகும் போது, 'பைஜாமா' உடையை மட்டுமே அணிய வேண்டும். இப்படி, 100 நாட்களுக்கு உறங்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில், மடிக்கணினி பயன்படுத்த மட்டும் தடை விதித்துள்ளோம்.
ஒவ்வொருவரின் உடலிலும், துாக்கத்தை கண்காணிக்கும் கருவி பொருத்தி, அதன் மூலம் அவர்கள் உறங்கும் விதங்கள் குறித்தும்,
குறிப்பிட்ட படுக்கையில் படுத்து உறங்குவதற்கு முன்னும், பின்னும் உள்ள மாற்றங்கள் குறித்தும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதை, 100 நாட்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பவர் களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க தயாராக இருக்கிறோம்.
துாங்க வதற்கு அதிக விருப்பமும், சிறிய இடைவெளி கிடைத்தாலும் தாங்கி விடும் தன்மை கொண்டவர் களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
Thanks for Your Comments