துப்பாக்கியை விளையாட்டாக இயக்கினேன், வெடித்து விட்டது - மாணவர் !

1 minute read
0
கல்லூரி மாணவர் சுடப்பட்ட விவகாரத்தில் சரணடைந் தவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப் பட்டுள்ளது
விளையாட்டாக இயக்கிய துப்பாக்கி வெடித்து விட்டது


காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கட மங்கலம் பகுதியை சேர்ந்த முகேஷ்.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவர் நேற்று தன் நண்பரான விஜய் வீட்டிற்கு சென்றார்.

முகேஷ் மற்றும் விஜய் இருவரும் வீட்டிற்குள் இருந்த நிலையில், சிறிது நேரத்தில் வீட்டுக்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

வீட்டுக்குள் இருந்த விஜய் வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். வெளியே நின்று கொண்டிருந்த விஜயின் அண்ணன் உள்ளே சென்று பார்த்த போது, முகேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

அவரின் நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. உடனடியாக முகேஷ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், வீட்டிற்குள் என்ன நடந்த்து? துப்பாக்கி எப்படி கிடைத்தது? வாக்குவாதம் ஏதும் நடைபெற்று கொலை நடந்ததா? 
வீட்டிற்குள் என்ன நடந்த்து?


அல்லது திட்டமிட்ட கொலையா? என பல கோணங்களில் விசாரித்தனர். தப்பி ஓடிய விஜயையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மாணவர் சுடப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்ட நபரான விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

அவருக்கு 15 நாட்கள் நீதி மன்றக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 

மேலும் போலீசாரிடம் விஜய் கூறியதாக சில தகவல்கள் வெளியாகி யுள்ளன. அதில் 2 ஆண்டு களுக்கு முன்பு குப்பைத் தொட்டியில் துப்பாக்கியை கண்டெடுத் தாகவும், 

அதனை மண்ணில் புதைத்து வைத்து கடந்த தீபாவளி அன்று வெளியே எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டாக துப்பாக்கியை இயக்கிய போது அது வெடித்து விட்டதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings