எடப்பாடி தகவலை புறக்கணித்த சசிகலா - களத்தில் தினகரன்!

1 minute read
0
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக் கான தேதியை தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். 
மேயர் பதவி கேட்டு அதிமுக

இதனால் ஆளுங் கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

தற்போது, எதிர்க் கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர் களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப் படுகிறது.

இதில் பாஜக, பாமக, தேமுதிக கட்சியினர் மேயர் பதவி வேண்டும் என்று கூறுவதாக சொல்லப் படுகிறது. 

தினகரனின் அ.ம.மு.க. வும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதாக கூறுகின்றனர். 

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை, தனிச்சின்னம் கிடைக்காமல் இருப்பதை காரணமாக கூறி புறக்கணிக் கலாம் என்று தினகரன் நினைத் துள்ளார். 
சசிகலா

ஆனால் கட்சிப் பிரமுகர்கள் பலரும், இடைத் தேர்தலை புறக்கணித்து விட்டு, உள்ளாட்சி யிலும் பங்கெடுக்க லைன்னா மக்கள் நம்மை மறந்துட்டு வாங்கன்னு வலியுறுத்தி யிருப்பதாக சொல்கின்றனர்.

பொதுச்சின்னம் இல்லை என்றாலும் இறங்கிப் பார்க்கலாம்னு தினகரனும் நினைப்பதாக சொல்லப் படுகிறது.

எடப்பாடியோ, அ.ம.மு. க. உள்ளாட்சித் தேர்தலில் நின்றால்; தேவை யில்லாமல் நம் ஓட்டுக்கள் தான் பிரியும். 

அதனால் உள்ளாட்சித் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று தினகரனு க்கு அறிவுறுத் துங்கள் என்று சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தகவல் அனுப்பினார். 

ஆனாலும் இதற்கு சசிகலா அசைந்து கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தான் தினகரன் இப்படி அறிவித் துள்ளார் என்று கூறுகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, April 2025
Privacy and cookie settings