காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால், காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வரும் விமானங் களும் ரத்து செய்யப் பட்டன.
மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகரை இணைக்கும் குரேஷ், மாச்சில், தாங்தார் ஆகிய இடங்களில் உள்ள சாலைகளும் மூடப்பட் டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகரை இணைக்கும் குரேஷ், மாச்சில், தாங்தார் ஆகிய இடங்களில் உள்ள சாலைகளும் மூடப்பட் டுள்ளன.
பிரதான சாலைகள் பனிப்பொழி வால் மூடப்பட் டுள்ளதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் ஸ்தம்பித்தன.
பிற்பகலுக்கு பிறகு நிலவும் வானிலை சூழலை பொறுத்து விமான வருகை, புறப்பாடு பற்றி முடிவு செய்யப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
நடப்பு பருவ காலத்தில் முதல் முறையாக இன்று காலை கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
வெப்ப நிலை உறை நிலைக்கும் கீழ் சென்றதால், மக்கள் கடும் குளிரை உணர்ந்தனர்.
வெப்ப நிலை உறை நிலைக்கும் கீழ் சென்றதால், மக்கள் கடும் குளிரை உணர்ந்தனர்.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை காலை வேளையில் பாதிக்கப் பட்டது. மின் விநியோகமும் காலையில் ரத்து செய்யப் பட்டது.
சாலைகளை மூடியபடி கிடக்கும் பனிக்கட்டி களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ஸ்ரீநகர் துணை ஆணையர் தெரிவித்தார்.
Thanks for Your Comments