70 ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான விவகாரம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதே போல், அயோத்தி யிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாகி யுள்ளது.
வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோயில் கட்டும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகி யுள்ளது.
அதே போல் கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆகும் எனவும் கூறப் பட்டுள்ளது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு உருவாக்கி யுள்ள வடிவமைப்பை பின்பற்றி இந்த கோயில் கட்டப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக ராமர் கோயில் கட்டுவதற் காக கற்தூண் களையும், உத்தரம் போன்ற அமைப்பு களையும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஏற்கெனவே உருவாக்கி வருகிறது.
1990 முதலே இந்த பணிகளை விஎச்பி செய்து வருகிறது. மேலும் தற்போது 60 சதவீத பணிகள் முடிவடைந் துள்ளதாக கூறப்படு கிறது.
விஎச்பி வடிவமைப்பின் படி, கோயிலின் உயரம் 128 அடி, அகலம் 140 அடியாகும்.
மொத்தம் 212 கல் தூண்கள் தேவைப்படும் என கணிக்கப் பட்டுள்ளது. இதில் தற்போது 106 தூண்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.
ராமர் கோயில் கட்டுமான திட்டம் குறித்து பேசிய ராமர் கோயில் பணிமனை யின் கண்காணிப்பாளர் ஒருவர், நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கோயில் கட்டும் பணி வேகமெடுக்கும்.
இன்னும் 5 ஆண்டுகளில் கோயிலைக் கட்டி முடிக்க திட்ட மிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments