வழக்கறிஞர்கள் இல்லாமல் தாமாக வாதம் செய்ய விதிமுறைகள் !

0
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல் தாமாக ஆஜாராகி வாதிடு வதற்கான விதிமுறை களை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது.
தாமாக வாதம் செய்ய விதிமுறைகள்


சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், வழக்குகளை தாக்கல் செய்யும் சிலர், வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல் தாங்களாகவே விசாரணையின் போது ஆஜராகி வழக்காடி வருகின்றனர். 

பார்ட்டி இன் பெர்ஷன் என அழைக்கப்படும் இந்த முறையை ஒழுங்குப் படுத்துவதற் காக சென்னை உயர் நீதிமன்றம் புதிய நடைமுறை களை வரையறுத் துள்ளது.

அது தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, ஒரு வழக்கிற்காக நேரில் ஆஜராகி வாதாட விரும்புபவர்கள் முதலில் அதற்கு அனுமதிகோரி மனு அளிக்க வேண்டும். 

அந்த மனுவில் நோட்டரி வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞர் ஆணையர் சான்றொப்பம் இட வேண்டும். 

மேலும், சம்பந்தப்பட்ட நபர் தனது வழக்கிற்காக ஏன் வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க விரும்ப வில்லை? என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

அந்த நபர் தொடர்ந்த வழக்கிற்காக நீதி மன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் ஒருவரை உயர் நீதிமன்றம் நியமிக்கும் பட்சத்தில் எந்தவித நிபந்தனையும் இன்றி அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


தனிநபர்கள் ஆஜராகி வாதாடுவதை ஒழுங்குபடுத்த ஒரு குழு ஏற்படுத்த வேண்டும்.

இந்த குழு, சம்பந்தப்பட்ட நபர் இலவசமாக சட்ட உதவி பெற தகுதி பெறும் நபராக இருக்கும் பட்சத்தில் இலவச சட்ட உதவிகளை அளித்து வரும் வழக்கறிஞர்கள் மூலம் மனுவை தாக்கல் செய்ய பரிந்துரைக்க வேண்டும்.

முன் அனுமதி கோரிய மனு, பிரதான மனு ஆகியவை இந்த குழுவால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும்.

தனிநபர்களை நேரில் ஆஜராகி வாதாட அனுமதிக்கும் பட்சத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பேச வேண்டும் என்றும், தகாத வார்த்தைகள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்றும் குழு அறிவுறுத்த வேண்டும். 

இது தொடர்பாக அவர்களிடம் இருந்து உத்தரவாதம் பெற வேண்டும் என அரசிதழில் கூறப்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings