நீரிழிவால் ஏற்படும் புண்களுக்கான சிகிச்சை !

1 minute read
0
தற்காலத்தில் முப்பது வயதைக் கடந்த ஆண்களும், முப்பத்தைந்து வயதைக் கடந்த பெண்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. 
நீரிழிவால் ஏற்படும் புண்களுக்கான சிகிச்சை
இவர்கள் பரிசோதனை செய்து கொண்டு உறுதி செய்து கொண்ட பின்னரும் அலுவலகச் சூழல் மற்றும் பயணச் சூழல் காரணமாக சரியான உணவினையோ 

அல்லது தற்காப்பு விடயங் களையோ மேற்கொள்ள முடிவதில்லை அல்லது தொடர்ந்து பின்பற்ற முடிவதில்லை. அதனால் சர்க்கரையை கட்டுப் பாட்டுக்குள் வைக்க தவித்து வருகிறார்கள்.

பெண்கள் சமைய லறையில் பணியில் ஈடுபடும் போது எதிர்பாராத வகையில் தீப்புண்களுக்கு ஆளாகிறார்கள். ஆண்களும் விபத்தின் போது சிறிய அளவில் பாதிக்கப் படுகிறார்கள். 
கான்கிரீட் கித்தான் எனப்படும் கான்கிரீட் கேன்வாஸ் !
இதனால் இவர்களுக்கு புண்கள் ஏற்படுகிறது. சாதாரண நிலையில் இருக்கும் போது உடலில் புண்கள் ஏற்பட்டாலே அவை குணமாக ஒரு வாரம் கூட ஆகலாம். 
தற்போது நீரிழிவு நோயும் உடனிருப்பதால், அந்த புண் குணமாவதில் ஏராளமான சிக்கல்கள் உருவாகின்றன. இதனால் மன உளைச்சலும் அதிகமாகிறது. 

மக்களின் இந்த நிலையை உணர்ந்த வைத்திய உலகம், நீரிழிவால் ஏற்பட்ட புண்களை குணப்படுத்த வதற்காகவே ‘ஹைப்பர்பேரிக் ஒக்ஸிஜன் தெரபி’ என்ற புதிய நவீன சிகிச்சையை அறிமுகப் படுத்தியிருக் கிறது. 

இந்த சிகிச்சை யின் போது, சுற்று புறத்தின் அழுத்தத்தை அதிகரித்து, தூய்மையான ஆக்ஸிஜனை சுவாசிக்கச் செய்வார்கள். 

தூய்மையான ஆக்ஸிஜன் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எனும் நீர்மத்திசுவின் செயற்பாட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. 
இந்த சிகிச்சை மூலம் திசுக்கள் புதுப்பிக்கப் படுவதுடன், ஏற்கெனவே இருக்கும் திசுக்கள் அழியாமலும் பாதுகாக்கப் படுகின்றன. 

அதே தருணத்தில் இவை பக்டீரியா, வைரஸ்கள் க்கு எதிராகவும் செயற்படுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோயாளி களுக்கு ஏற்படும் புண்களுக்கு சத்திரச் சிகிச்சை யின்றி சிகிச்சை யளிக்க இயலுகிறது. 
கான்கிரீட்டில் அரிப்பை சரி செய்ய !
அத்துடன் இந்த சிகிச்சையின் மூலம் கதிர் வீச்சினால் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், நோய்த்தொற்றுகள், விபத்துக் காயங்கள் உள்ளிட்ட வற்றையும் குணப்படுத்த இயலும். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 21, March 2025
Privacy and cookie settings