எதிர்பாராத பதவி - உத்தவ் முதல்வர் !

0
மஹாராஷ்டிர முதல்வரானது எதிர் பாராதது என முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி யுள்ளார்.
எதிர்பாராத பதவி

மஹாராஷ்டிரா முதல்வராக, நேற்று (நவ.,28) பொறுப்பேற்று கொண்ட உத்தவ் தாக்கரே இன்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார். 

அவரை அதிகாரிகள் வரறே்றனர். பின்னர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது பொது மக்களின் பணத்தை வீண்டிக்கக் கூடாது. வளர்ச்சி திட்டங்களை உடனடியாக துவக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்; எனது முன்பு மிகப்பெரிய சவால் உள்ளது. நாங்கள் எப்போதும், எங்களுக்காக உழைத்தது இல்லை. 

மக்களுக் காக உழைத்துள்ளோம். முன்னர் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டதா என்பதை கண்டறிய விரைவாக செயல்பட வேண்டும். 

எனக்கு முன் உள்ள பொறுப்பை நான் நிறைவேற்ற விட்டால், நான் பால் தாக்கரே மகன் என மக்கள் முன்னர் காட்டி கொள்ள முடியாது நான் முதல்வரானது எதிர் பாராதது.
முதல்வர் உத்தவ்

என் முன் உள்ள பொறுப்புகளை கண்டு தப்பியோட விரும்ப வில்லை. ஆரே பகுதியில், மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. 

நள்ளிரவில் மரங்களை வெட்டுவது ஏற்க முடியாது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஒரு மரக்கிளைகள் கூட வெட்டப்பட்டு கூடாது.

மும்பை நகரில் பிறந்த நபர், மஹா.,முதல்வராக பதவியேற்ற முதல் நபர் நான் தான். இதனால், இந்த நகருக்கு என்ன செய்ய வேண்டும் என எனது மனதில் தொடர்ந்து ஓடிக்கொண் டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.இ தன் இடையே, மஹாராஷ்டிரா சட்டசபை நாளை கூட உள்ளதாகவும், அப்போது உத்தவ் அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் எனக்கூறப்படு கிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலிப் வால்சே பாட்டீல், இடைக்கால சபாநாயராக நியமிக்கப் பட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings