பயத்தை போக்க சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக்கழகம் !

0
தேர்வுகள் என்றாலே மாணவர்கள் அனைவரு க்கும் ஒருவித பதற்றம் தொற்றிக் கொள்ளும். அதிலும் பொதுத் தேர்வுகள் என்றால் இன்னும் பரபரப்புடன் காணப் படுவார்கள்.


அந்நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததினால் தேர்வை கோட்டை விடுபவர்களும் உண்டு.

தேர்வுகளில் ஏற்பட்ட தோல்வி யினால் மனமுடைந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டு. 

தேர்வு நேரத்தில் மாணவர் களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் நிபுணர்கள் பல்வேறு வழிமுறைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வு நேரங்களில் மாணவர் களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க அவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் வினோத முறையை நெதர்லாந்து பல்கலைக் கழகம் கையாள்கிறது.

நெதர்லாந்து நாட்டின் நிஜ்மேகன் நகரில் உள்ள ராட் பௌடு பல்கலைகழகம் இந்த முறையை கையாள்கிறது. 


அரைமணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை சவக்குழியில் மாணவர்கள் படுக்க வைக்கப்படு கிறார்கள். 

‘வித்தியாசமாக இருங்கள்’ என்ற படுக்கையுடன் ஒரு போர்வை, யோகா பாய் ஆகியவை கொடுக்கப் படுகின்றன.

மாணவர் களிடையே இது மிகவும் பிரபலமாகி யுள்ளது.

இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், ‘இந்த முறை மிகவும் பிரபலமாகி யுள்ளது, சவக்குழியினுள் படுக்க நாங்கள் முயற்சி செய்தோம். 


ஆனால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது. நிச்சயம் வேறு ஒரு நாள் அங்கு செல்வோம்’, என்றார்.

இத்திட்டத்தின் நிறுவனர் ஜான் ஹாக்கிங் இது பற்றி கூறுகையில், ‘18, 19 வயதுகளில், வாழ்க்கையின் முடிவு, மரணம் போன்ற வற்றை பற்றி மாணவர் களிடம் பேசுவது மிக கடினம், 

ஆனால் இந்த சவக்குழியில் படுப்பது, இந்த பூமியில் நமது வாழ்நாள் பற்றிய உண்மையை ஏற்றுக் கொள்ள உதவியாக இருக்கும்’ என்றார்.

கல்லூரி வளாகத்தில் ‘மரிப்பாய் ஒரு நாள் நினைவிருக் கட்டும்’ என எழுதப்பட்ட பலகைகளும் வைக்கப் பட்டுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings