தமிழகத்தில் கடலுக்குள் கிராமங்கள் மூழ்கி வருவதாகக் கூறுவதில் உண்மை யில்லை என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவகால மாற்றம் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் வெள்ளிக் கிழமை கேள்வி நேரத்தின் போது தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
அவா் பேசுகையில், 'தமிழகம் மிகப் பரந்த கடலோரப் பகுதியைக் கொண்டது. கடல் அரிப்பு, உப்பு நீா் நிலத்தடி நீரில் ஊடுருவல் ஆகியவை காரணமாகப் பெரிய பாதிப்பால் மக்கள் துயருற்று வருகின்றனர்.
கிராமங்களைப் பாதுகாக்கச் சிறிய சுவர்கள் இருந்தாலும், ஒரே இரவிலேயே கடல் நீரில் கிராமங்கள் மூழ்கி வருகின்றன. இதைத் தடுக்க நீண்ட காலத் திட்டங்கள் என்ன உள்ளன.
விளைவு ஆய்வு ஏதும் மேற்கொள்ள பப ட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பதில் அளித்துப் பேசியதாவது:
சென்னையில் தேசிய கடலோர மண்டல நிர்வாக கல்வி நிறுவனத்தில் ஆய்வகம் உள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வகத்தில் கடலோரம் குறித்த தகவல்கள் உள்ளன.
அங்கு உறுப்பினர்கள் பார்வை யிடலாம். தமிழகத்தில் 500 கிலோ மீட்டா் தூரத்திற்கு மாங்குரோவ் காடுகள் வளர்க்கப் பட்டுள்ளன. 1,600 ஹெக்டோ் பரப்பளவில் புதிய தோட்டம் அமைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடலுக்குள் கிராமங்கள் மூழ்கி வருவதாகக் கூறப்படுவதில் உண்மை யில்லை. அது போன்ற புகார் ஏதும் இல்லை' என்றார்.
அதற்குக் கனிமொழி எம்பி, 'எனது தொகுதியில் கடலில் கிராமங்கள் மூழ்கி யுள்ளதை நானே பார்த்திருக் கிறேன்' என்றார்.
அதற்கு 'அது தொடர்பான தகவல் களைத் தெரிவித்தால் ஒரு சிறப்புக் குழுவை அங்கு அனுப்புகிறேன்' என்று அமைச்சா் தெரிவித்தார்... தினமணி...
Thanks for Your Comments