காட்டிற்குள் டிரக்கிங் சென்ற இரண்டு பெண்கள் திரும்ப வராத நிலையில் சுமார் 10 வாரங்களுக்குப் பிறகு அவர்களின் செல்போன் கிடைத்தது அவர்கள் என்ன ஆனார்கள்?
அந்த செல்போனில் அப்படி என்ன இருந்தது? என முழுமையாகப் பார்க்கலாம் வாருங்கள்.
நெதர்லாந்து பெண்கள்
நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் கிரிஸ் கிரீமர்ஸ், லிசேன் ஃப்ரூன். இவர்கள் இருவரும் தோழிகள். கல்லூரி படிப்பை முடித்த இவர்கள் சிறிது காலம் உலகில் எங்காவது டூர் செல்ல வேண்டும் என நினைத்தார்கள்.
அதன் பேரில் கடந்த 2014ம் ஆண்டு இவர்கள் மத்திய அமெரிக்காவின் பனாமா பகுதிக்கு டூர் சென்றனர்.
டூர் திட்டம்
சுமார் 6 வார திட்டத்துடன் இவர்கள் பனாமாவிற்கு 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி வந்தடைந்தனர்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் எங்குச் செல்ல வேண்டும், எங்குச் சாப்பிட வேண்டும். எங்குத் தங்க வேண்டும் என்ற தெளிவான திட்டத்துடன் இருந்தனர்
தெவளிவான பிளான்
மேலும் அவர்கள் தங்கப் போகும் இடங்களில் முன்பதிவு மற்றும் அவர்களைத் தொடர்பு கொண்டு தங்களின் வருகை குறித்த தகவல்கள் என தெளிவான ஒரு ட்ரிப்பை திட்ட மிட்டிருந்தனர்.
அதன் அவர்கள் மார்ச் 29ம் தேதி பனமாவில் ஒரு ப்ரூ வல்கனோ என்ற ஒரு மலையடி வாரத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கினர்.
தங்கிய வீடு
அந்த வீட்டார் அந்த மலைப்பகுதி டூர் வருபவர்களைத் தங்க வைத்து அவர்களுக்கு உணவளித்து அதற்காகப் பணம் பெற்றுக் கொள்வது. வழக்கம் அதன் படி இந்த இரண்டு பெண்களும் அந்த வீட்டில் சென்று தங்கினர்.
பொதுவாக அந்த வீட்டில் வந்து தங்கி காட்டிற்குள் பயணம் செல்ல வேண்டும் என நினைப்பவர் களுடன் அந்த வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் நாயையும் உடன் அனுப்புவார்கள்.
துணைக்கு செல்லும் நாய்
ஒரு வேளை காட்டிற்குள் செல்பவர்கள் வழி தவறிவிட்டால் இந்த நாய் அவரை சரியாக இவர்கள் வீட்டிற்கு வழி நடத்திக் கொண்டு வந்து விடும் என்பதால் இதை ஒரு பழக்கமாக அவர்கள் வைத்திருந்தார்கள்.
மேலும் அந்த நாய்க்கு அந்த காட்டுப் பகுதியில் எங்குச் சென்றாலும் சரியாக வீட்டிற்கு வரப் பயிற்சியும் அளித்திருந்தார்கள்.
டிரக்கிங் முடிவு
இந்நிலையில் 2014ம் ஆண்டு ஏப்1ம் தேதி இந்த இரண்டு பெண்களும் அந்த மலைக்குள் டிரக்கிங் செல்ல முடிவு செய்து அதற்கு ஆயத்த மானார்கள்.
அவர்கள் செல்லும் முன்பு செல்பி எடுத்து தங்கள் டிரக்கிங் செல்லும் தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தனர்.
திரும்ப வந்த நாய்
டிரக்கிங் சென்ற இவர்கள் இரவாகியும் திரும்ப வரவில்லை. அவர்களுடன் சென்ற நாய் இரவு நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்ப வந்தது.
வெறும் நாய் மட்டும் திரும்ப வந்ததைப் பார்த்த அந்த வீட்டில் உள்ளவர்கள் பதறிப் போனார்கள். இருந்தாலும் அவர்கள் இரவு நேரம் என்பதால் வழி தெரியாமல் வராமல் இருக்கலாம்.
விடியும் வரை காத்திருக்கலாம் என அவர்கள் நினைத்தனர்.
தேடுதல் வேட்டை
இந்நிலையில் விடிந்தும் அவர்கள் வராதது அவர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் டூர் திட்டப்படி அந்த நாள் ஒரு டூரிஸ்ட் கைடை அவர்கள் சந்திக்க வேண்டும் ஆனால் அதற்கும் அவர்கள் வரவில்லை.
இதனால் பதற்றம் அதிகமாகி அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீஸ் உதவியுடன் உள்ளூர் மக்கள் சிலர் அவர்களைத் தேடி காட்டிற்குள் சென்றனர்.
இதற்கிடையில் இந்த இரண்டு பெண்கள் காணாமல் போனது குறித்து அவர்களது பெற்றோர் களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
தேடுதல் பணியில் நெதர்லாந்து
இதில் பெரிய அளவில் எந்த பலனும் இல்லை. அவர்கள் காட்டிற்குள் எங்குச் சென்றார்கள் என யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலையே இருந்தது.
இந்நிலையில் சரியாக ஏப் 6ம் தேதி அந்த இரண்டு பெண்களின் பெற்றோர்களும் நெதர்லாந்து போலீசாரிடம் நடந்ததை சொல்லி நெதர்லாந்து நாட்டு போலீசார், துப்பறிவாளர்கள், மோப்ப நாய்களுடன் பனாமா வந்தனர்.
10 நாட்களாக கிடைக்காத தடயம்
அவர்களும் தேடுதல் வேட்டையைத் துவங்கினர். அவர்களுக்கும் எந்த தடயமும் கிடைக்க வில்லை காட்டிற்குள் இவர்கள் எங்குதான் சென்றார்கள் என எந்த தகவலும் கிடைக்க வில்லை.
சுமார் 10 நாட்கள் தேடியும் எதுவும் கிடைக்காத நிலையில் அந்த இரண்டு பெண்களின் பெற்றோர்களும் தங்கள் மகளைக் கண்டுபிடித்துத் தருபவர் களுக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு அளிக்கப்படும் என அறிவித்தனர்.
10 வாரம் கழித்து கிடைத்த க்ளு
ஆனால் அப்படி இருந்தும் அவர்கள் ஒரு தகவல் கூட கிடைக்க வில்லை அவர்களின் செல்போன் களையும் சிக்னல் இல்லாததால் டிராக் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து 10 வாரங்கள் கழித்துத் தேடுதல் பணிகள் எல்லாம் முடிந்த நிலையில் இவர்களுக்கு அவர்கள் குறித்த ஒரு சிறு தகவல் கிடைத்தது.
அந்த பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் ஒரு நீல நிற தோள் பை கிடப்பதை ஒரு பெண் பார்த்துள்ளார்.
தோள் பை
அந்த பையிற்குள் பல பொருட்கள் இருந்துள்ளது. இதை யடுத்து அந்த பையுடன் அந்த பெண் போலீஸ் நிலையம் வந்து அந்த பையை ஒப்படைத்தார்.
அந்த பெண் அங்குள்ள வயல்பகுதியில் தினமும் வேலை செய்வதால் அன்றுதான் அந்த பை அங்கு வந்ததை அந்த பெண் உறுதி செய்தார்.
சிக்கிய செல்போன்
இந்நிலையில் போலீசார் அந்த பையைச் சோதனையிடும்போது அது ஃபரூனின் தோள் பை எனவும், அதில் இரண்டு கண்ணாடி, 83 அமெரிக்க டாலர் பணம், ப்ரூனின் பாஸ்போர்ட், தண்ணீர் பாட்டில்,
ப்ரூனின் கேமரா, இரண்டு உள்ளாடைகள், இரண்டு செல்போன்கள் (ஒன்று ப்ரூனுடையது, மற்றொன்று கிரிஸ் உடையது.)
மர்மம் துவக்கம்
அந்த போன்கள் சுவிட் ஆஃப் செய்யப் பட்டிருந்த நிலையில் அவற்றிற்கு சார்ஜ் போட்டு அந்த போனை பரிசோதனை செய்த போது தான் உண்மையான மர்மங்கள் எல்லாம் துவங்கின.
இந்த இரண்டு போன்களினலும் அவர்கள் காணாமல் போன ஏப் 1ம் தேதி முதல் தீவிர தேடுதல் வேட்டை நடந்த ஏப் 11ம் தேதி வரை மாறி மாறி அவசர உதவி எண்களுக்கு போன்கள் போயிருந்தது.
அவசர உதவி அழைப்பு
ஆனால் சரியான சிக்னல் இல்லாததால் இவர்களது போன்கள் கனெக்ட் ஆகவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் இவர்களது போன் கால்கள் கனெக்ட் ஆகியது.
ஆனால் சரியாக சிக்னல் இல்லாததால் அவர்கள் பேசுவது கேட்கவில்லை. சில நொடிகளில் கால் கட்டாகி விட்டது.
ஏப் 1-ம் தேதி துவங்கி ஏப் 6ம் தேதி வரை இவர்கள் தினமும் அவசர அழைப்பிற்கு முயற்சித் துள்ளனர். இதில் ஃப்ரூனின் செல்போன் ஏப் 5ம் தேதி சுவிட்ச் ஆப் ஆகி விட்டது.
தொடர் முயற்சி
ஏப் 6ம் தேதி கிரீஸ் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. ஆனால் அன்று செல்போன் பின் போடப்பட வில்லை. போடாமலேயே இரண்டு முறை அழைப்பு முயற்சிக்கப் பட்டது.
அதன் பின் 5 நாட்களுக்கு செல்போனில் எந்த நடவடிக்கையும் இல்லை. சரியாக ஏப் 11ம் தேதி மீண்டும் அழைப்பு முயற்சிக்கப் பட்டுள்ளது.
ஆனால் அதுவும் கனெக்ட் ஆகவில்லை. அதன் பின் சிறிது நேரத்தில் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது.
சிக்கிய கேமரா
மேலும் அந்த பையிலிருந்த கேமராவில் ஏப் 8ம் தேதி நள்ளிரவு 1 மணியிலிருந்து 4 மணி வரை சுமார் 90 புகைப்படங்கள் எடுக்கப் பட்டிருந்தது
அவை எல்லாம் பெரும்பாலும் கருப்பாகவே இருந்தன. சில புகைப் படங்களில் பாறைகள் மட்டும் பிளாஷ் வெளிச்சத்தில் தெரிந்தன. மற்றபடி அந்த புகைப் படங்களில் எதுவும் இல்லை.
மீண்டும் தேடுதல் வேட்டை
இதை யடுத்து இவர்களைத் தேடும் பணி மீண்டும் துவங்கியது. தோள் பை கிடைத்த ஆற்றங்கரை பகுதியிலேயே உட்புறமாகக் காட்டுப் பகுதிகளில் தேடுதல் நடந்தது.
ஆனால் அப்பொழுது கிடைத்தது கிரிஸின் ஜின்ஸ் பேண்ட் மட்டும் தான் அது அதே ஆற்றங்கரை யில் சில கி.மீ தொலைவில் கிட்டத்தது.
2 மாதம் கழித்து கிடைத்த விடை
சுமார் 2 மாதங்களாக நடந்த பணியில் இறுதியாக ஒரு இடத்தில் ஒரு காலணியும் சில எலும்புகளும் கிடைத்தன. அதில் ஒரு குறிப்பிட்ட எலும்பில் சற்று சதைகள் இருந்தது.
சில எலும்புகள் சதை இல்லாமல் வெறும் எலும்புகளாக இருந்தன. இந்த எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்த போது அது கிரிஸ் மற்றும் ஃபரூனின் எலும்புகள் என்று உறுதியானது.
மர்ம மரணம்
அதன் பின் இவர்கள் இருவரும் இறந்துவிட்டனர் என உறுதி செய்யப் பட்டது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் டிரக்கிங் செல்லும் போது தவறி விழுந்து,
அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சிக்கி உயிரிழந்திருக் கலாம் எனக் கூறி போலீசார் வழக்கை முடித்து விட்டார்.
மர்மம் என்ன?
இவர்கள் காட்டுப் பகுதிக்குள் காணாமல் போன போது இவர்கள் தங்களின் செல்போன்க ளிலிருந்து ஏன் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளப் பல முறை முயற்சி செய்தார்கள்?
அவர்கள் செல்போன் பயன்படுத்தும் அளவிற்குச் சுய நினைவுடன் இருந்த அவர்களால் அந்த இடத்தை விட்டு ஏன் வர முடிய வில்லை என்பது மர்மம்.
அவசர உதவி ஏன்?
அவர்கள் செல்போனில் ஏப் 1ம் தேதியே அவசர எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். அப்படி யானால் அவர்கள் முதல் நாளிலேயே ஏதோ விஷயத்தில் சிக்கி யிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் ஏப் 11ம் தேதி வரை செல்போனை பயன்படுத்தி யுள்ளனர். சுமார் 10 நாட்கள் அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் எப்படி உயிர் பிழைத்தனர்? என்பது மர்மம்
தேடுதலில் சிக்காதது ஏன்?
இவர்கள் காட்டில் தான் ஏப் 11வரை உயிருடன் இருந்தார்கள் என்றால் காட்டில் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்திய குழுவால் ஏன் ஒரு தடயத்தைக் கூட கண்டு பிடிக்க முடிய வில்லை?
தேடுதல் குழு தேடிய இடங்களில் அவர்கள் எலும்புகள் கிடந்த பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.
புகைப்படம் எடுக்க காரணம்?
ஏப் 8ம் தேதி நள்ளிரவு 1 மணி முதல் 4 மணி வரை இவர்கள் 90 புகைப் படங்கள் எடுக்கக் காரணம் என்ன? இந்த புகைப் படங்கள் எல்லாம் ஏன் கருப்பாக உள்ளது. என்பது மர்மம்.
தவறான பின் நம்பர்
இவர்கள் செல்போன்களை பயன்படுத்திய போது கிரிஸின் ஐபோனில் ஏப்6ம் தேதிக்குப் பிறகு பல முறை தவறான பின் நம்பர்கள் என்டர் செய்யப்பட்டு முயற்சி செய்யப் பட்டுள்ளன.
அதன் பின் ஒரு முறை கூட சரியான பின் நம்பர் அழுத்தப்பட்டு செல்போன் பயன்படுத்தப்பட வில்லை ஏன் எப்படி நடந்தது? இதுவும் மர்மம் தான்
10 வாரங்களுக்கு பிறகு கிடைத்த பை?
0 வாரங்களுக்குப் பிறகு அவர்களின் தோள் பை மற்றும் எப்படி ஆற்றங்கரை பகுதிக்கு வந்தது. அந்த பையில் எல்லாம் சரியாக பேக செய்யப் பட்டிருந்தது.
இது எப்படி சாத்தியம் அவர்கள் ஏப் 11ம் தேதி வரை செல்போனை பயன்படுத்திய பின்பு அவர்கள் ஏன் தோள் பையைச் சரியாக பேக் செய்ய வேண்டும்? இதுவும் இந்த வழக்கில் மர்மம் தான்.
பல சந்தேகங்கள்
இன்னும் இது போன்று பலர் இந்த வழக்கை வெவ்வேறு கோணங்களில் பார்த்து அவர்களது சந்தேகங் களை இன்றும் எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தீராத மர்மம்
உலகில் தீராத மர்மங்களில் இந்த இரண்டு பெண்களின் மரணமும் இணைந்து விட்டது. இந்த மர்மங்கள் எல்லாம் தீருமா? அல்லது தீர்க்கப் படாமலே போகுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப் படுத்துங்கள்.
Thanks for Your Comments