இடுப்பு பகுதியை ஃபிட்டாக்கும் 3 பயிற்சிகள் !

வீட்டிலேயே ஒவ்வொரு பகுதிக்கான எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம் ஃபிட்டான உடல் அமைப்பைப் பெற முடியும். 
இடுப்பு பகுதியை ஃபிட்டாக்கும் பயிற்சிகள்


உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், வாக்கிங், ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்து விட்டு, தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

முழு உடலுக்கான பயிற்சியின் முதல் பகுதியாக, மேல் பாகத்துக்கான பயிற்சிகள் அளிக்கப் பட்டுள்ளன.

தொடர்ந்து இதைச் செய்துவந்தால், மூன்றே மாதத்தில் அழகான ஃபிட்டான தோள், வயிறு, இடுப்புப் பகுதிகள் நிச்சயம் கிடைக்கும்.

இந்தப் பயிற்சிகளை செய்வதற்கு முன்பு, வார்ம்அப் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சி முடித்த பிறகு, கூல்டவுன் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

மாடிஃபைடு புஷ் அப்ஸ் (Modified push ups)
மாடிஃபைடு புஷ் அப்ஸ் - Modified push ups
தரையில் முட்டிபோட்டு, கைகள் நேராகத் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். பாதங்களை சற்று தூக்கி, ஒரு பாதத்தின் மேல் மற்றொரு பாதம் வைத்து, முழு உடலையும் தரைப் பகுதி வரை இறக்க வேண்டும். 


ஆனால் தரையில் படக்கூடாது. பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல 10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: நெஞ்சு, மேல் வயிறு, கை பகுதி மற்றும் உள் தசைகள் (கோர் மசில்) உறுதியாகும்.

பேசிக் கிரன்சஸ் (Basic crunches)
பேசிக் கிரன்சஸ் - Basic crunches
தரையில் நேராகப் படுத்து, கால் முட்டிகளை மடக்கி வைக்க வேண்டும். கைகளை, தலைக்குப் பின் வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது, உடலின் மேல் பகுதியை முட்டி வரையில் கொண்டு சென்று பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி 8-10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: வயிற்றுப்பகுதி அழுத்தப் படுகிறது. வயிற்றில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு, தசை வலிமை பெறுகிறது. தொப்பை கரையும்.

க்ரிஸ் கிராஸ் கிரன்சஸ் (Criss cross crunches)
>க்ரிஸ் கிராஸ் கிரன்சஸ் - Criss cross crunches


தரையில் நேராகப் படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தலைக்குப் பின்புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த நிலையில் இருந்து, வலது கால் முட்டியை மடித்து, காலை வயிற்றுப் பகுதி நோக்கிக் கொண்டு வர வேண்டும்.

அதே நேரம், உடலின் மேல் பகுதியையும் வயிற்றுப் பகுதி நோக்கி கொண்டுவர வேண்டும். பின்னர் இதே போல இடது காலுக்குச் செய்ய வேண்டும். இது போல் 8-10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: மேல் மற்றும் அடி வயிற்றுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. கொழுப்பு குறைந்து, தசைகள் வலுவடைகிறது. இடுப்பு பகுதிக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்கும்.
Tags:
Privacy and cookie settings