அரசு மருத்துவமனையில் 36 மரங்கள் வேரோடு மாற்று இடத்தில் நடவு !

0
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டடம் அமைய உள்ள பகுதியில் இருந்த 36 மரங்களை வேறோடு அகற்றி, மாற்று இடத்தில் நடவு செய்யப் பட்டுள்ளன.
36 மரங்கள் வேரோடு மாற்று இடத்தில் நடவு


சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை உலகிலேயே மிக பழமையான இரண்டாவது கண் மருத்துவமனை. 

இந்த வளாகத்தில் நோயாளிகள் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற் காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

இந்நிலையில், புதிதாக கட்டடம் அமைய உள்ள பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்டக் கூடாது என

தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் மரங்களை மாற்று இடத்தில் மாற்றி நடுவதற்கு அனுமதி அளித்து உத்தர விட்டனர். 

இதனைத் தொடர்ந்து மரங்களை வேறு இடத்தில் மாற்றி நடவு செய்வதற் கான பணிகள் தொடங்கப் பட்டன.

இது குறித்து பொது பணித்துறை உதவி பொறியாளர், சுந்தரேசன் கூறுகையில், ”கட்டடம் வர உள்ள பகுதியில், கட்டடத்திற்கு இடையூறாக இல்லாத மரங்கள் வெட்டாமல் விடப்பட்டுள்ளது. 

நான்கு லட்சம் ரூபாய் செலவில், 10 நாட்களில் இப்பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை கட்டடப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

கோவையைச் சேர்ந்த, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாகி சையது மற்றும் சென்னை ட்ரீ ஆம்புலன்ஸ் பவுன்டேஷன் உதவியுடன், ஜே.சி.பி இயந்திரம், 


டிப்பர் லாரி உள்ளிட்டவை களின் துணையோடு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வேறொடு எடுத்து, மாற்று இடத்தில் நடவு செய்யப் பட்டுள்ளது” என்றார்.

மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்யும் பணியில் ஈடுபட்ட ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில்,

”மரத்தின் வயது, மண் பரிசோதனை, வேறு இடத்தில் நட்டால் துளிர்க்கும் வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப் பட்டன. 
இதில், 36 மரங்களை வேறோடு எடுத்து மாற்று இடத்தில் நடவு செய்தால் துளிர்க்கும் என கண்டறிப் பட்டது. அந்த 36 மரங்கள் தற்போது மருத்துவ மனையிலேயே வேறு இடத்தில் நடவு செய்யப் பட்டுள்ளது என்றார்.

கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையின் இதயம் போல் இருக்கும் பசுமையான மரங்கள் எழும்பூர் கண் மருத்துவ மனையில் வெட்டப் படாமல் காப்பாற்றப் பட்டுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings