வேலூரை அடுத்த அரியூர் ரயில்வேகேட் பகுதியைச் சேர்ந்தவர் யோபு சரவணன் என்கிற ஜோப் சரவணன் (49).
இவர் தன்னை பாதிரியார் எனவும் `கல்வாரி மிஷன்’ என்கிற தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருப்பதாக வும் கூறி வந்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்க ளிடமிருந்து தனக்குப் பணம் வருவதா கவும்
அதன் மூலம் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தருவதாகவும் விளம்பரப் படுத்தி யுள்ளார்.
அதன் மூலம் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தருவதாகவும் விளம்பரப் படுத்தி யுள்ளார்.
அதை நம்பி அவரை அணுகிய குடியாத்தத்தைச் சேர்ந்த பலரிடம் டெபாசிட் தொகையாக லட்சக் கணக்கில் வசூலித்துள்ளார். அதன் பிறகு, பல மாதங்களா கியும் அவர் வீடு கட்டிக் கொடுக்க வில்லை.
டெபாசிட் தொகையையும் திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டவர் களுக்கு `செக்’ கொடுத்துள்ளார். அதை வங்கியில் மாற்றிய போது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது.
பின்னரே, யோபு சரவணன் மோசடி செய்ததை உணர்ந்தனர். அதை யடுத்து, 2007-ம் ஆண்டு பாதிரியார் யோபு சரவணன் `செக்’ மோசடி செய்ததாக குடியாத்தம் நீதி மன்றத்தில் பாதிக்கப் பட்டவர்கள் இரண்டு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிரியார் ஆஜராகா மலேயே இருந்தார்.
இதனால், 2016-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பாதிரியார் யோபு சரவணனை தேடப்படும் குற்றவாளி யாக அறிவித்து குடியாத்தம் நீதிமன்றம் `பகிரங்க அறிவிப்பு’ வெளியிட்டது.
இதனால், 2016-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பாதிரியார் யோபு சரவணனை தேடப்படும் குற்றவாளி யாக அறிவித்து குடியாத்தம் நீதிமன்றம் `பகிரங்க அறிவிப்பு’ வெளியிட்டது.
பிடிவாரன்ட் பிறப்பித்தும் அவரைப் பிடிக்க முடிய வில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போதும், பாதிரியார் நேரில் ஆஜராக வில்லை.
மாஜிஸ்திரேட் செல்ல பாண்டியன் வழங்கிய தீர்ப்பில், யோபு சரவணன் மீதான மோசடி நிரூபணமான தால் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.16 லட்சம் அபராதமும் விதித்து உத்தர விட்டார்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக 6 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து 15 நாள்களு க்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டு மென்றும் நீதிபதி எச்சரித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, தலைமறை வாக இருந்த பாதிரியார் யோபு சரவணன் குடியாத்தம் நீதிமன்றத்தில் நேற்று திடீரென சரணடைந்தார்.
அதைத் தொடர்ந்து, தலைமறை வாக இருந்த பாதிரியார் யோபு சரவணன் குடியாத்தம் நீதிமன்றத்தில் நேற்று திடீரென சரணடைந்தார்.
அப்போது, `தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளேன். தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
அவரின் கோரிக்கையை நிராகரித்த மாஜிஸ்திரேட் செல்ல பாண்டியன் சிறையில் அடைக்க உத்தர விட்டார். அதன்படி, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் யோபு சரவணன் அடைக்கப் பட்டார்.
Thanks for Your Comments