பெண் ஆசையில் மசாஜ் சென்டருக்கு சென்றவர் ₹5 லட்சம் பறிகொடுத்த பரிதாபம் !

0
புதுச்சேரியில் பெண் ஆசையுடன் மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபர் ஒருவர், 5 லட்சம் ரூபாயை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறி யுள்ளது.
பெண் ஆசையில் மசாஜ் சென்டருக்கு சென்றவர்


கந்தசாமி படத்தில் வரும் என் பேரு மீனா குமாரி பாடலில் வருவதுபோல, மசாஜ் சென்டருக்குச் சென்று அழகிகளுடன் குத்தாட்டம் போட ஆசைப்பட்ட 63 வயதான நபர் ஒருவர்,

அடி உதை வாங்கியதோடு 5 லட்சம் ரூபாய் பணத்தையும் பறி கொடுத்துள்ளார்.

புதுச்சேரி திருமுடி சேதுராமன் நகரைச் சேர்ந்தவர் 63 வயதான மஞ்சுநாத். தொழிலதிபரான இவர், அடிக்கடி மசாஜ் செய்யும் பழக்கம் கொண்டவர். 

ஈசிஆர் சாலையில் உள்ள மசாஜ் செண்டருக்கு அடிக்கடி சென்று வருவது மஞ்சு நாத்துக்கு வழக்கம். இதனால் அதன் உரிமையாளர் ராஜேஷ் என்பவருடன் மஞ்சு நாத்துக்கு பழக்கம் ஏற்படடது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுநாத்தை செல்போனில் அழைத்த ராஜேஷ், முதலியார் பேட்டையில் புதிய மசாஜ் செண்டர் தொடங்கி யிருப்பதாகவும், அங்கு இளம் அழகிகள் இருப்பதாக வும் கூறினார்.


இளம் அழகிகள் என்ற ராஜேஷின் வார்த்தைக ளால் சபலமடைந்தார் மஞ்சுநாத்.

உடனே ராஜேஷ் கூறிய இடத்திற்கு சென்ற மஞ்சுநாத், பெயர்ப்பலகை எதுவும் இல்லாமல் மசாஜ் செண்டர் நடக்கிறதா என சந்தேக மடைந்தார்.

அவரை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்ற ராஜேஷ், திடீரென அங்கிருந்த மற்றொரு நண்பருடன் சேர்ந்து மஞ்சுநாத் பையில் இருந்த பணத்தை பறித்துள்ளார்.

பணத்தை தர மறுத்தபோது, இளம் அழகிகள் ஆசையுடன் மசாஜ் செண்டருக்கு வந்ததை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டி யுள்ளார். அப்போதும் மஞ்சுநாத் மசிய மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ராஜேசும், அவரது நண்பரும் சேர்ந்து கண்மூடித் தனமாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் கதறிய மஞ்சு நாத்திடம் இருந்து பணம் 


மற்றும் வாட்சை பறித்த ராஜேஷ் கூகுள் பே மூலம் மஞ்சுநாத் வங்கிக் கணக்கில் இருந்த 5 லட்சம் ரூபாயையும் தன் வங்கிக் கணக்கிற்கு மாற்றிய பின்னர் செல்போனையும் பறித்துச் சென்றார்.

இது தொடர்பாக, மஞ்சுநாத் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார்,

மசாஜ் செண்டர் உரிமையாளர் ராஜேஷ், அவரது நண்பர் சத்யா ஆகியோரைத் தேடி வருகின்றனர். 

இதனிடையே, புதுச்சேரியில் பல இடங்களில் மசாஜ் செண்டர் என்ற பெயரில் பல குற்ற சம்பவங்கள் நடைபெறுவ தாக சமூக ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர்.

இதற்கு உரிய நடவடிக்கையை காவல்துறையும், அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings