காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை பலி வாங்கிய பிரபல ராஜஸ்தான் கொள்ளை கும்பல் தலைவனான நாதுராமிடம் பயிற்சி பெற்ற குற்றவாளி களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பூக்கடை குடோன் தெருவைச் சேர்ந்தவர் தல்லாராம். இவர் இப்பகுயில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 9ம் தேதி இவரது கடையை உடைத்த மர்ம நபர்கள் 7 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகளையும் கொள்ளை யடித்து தப்பினர்
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பூக்கடையில் ஒரு விடுதியில் தங்கி யிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான ஷ்யாம் குஜ்ஜார், தயாள் பாகர், 21 வயதான மகேஷ் சவுத்ரி ஆகிய 3 பேர் மீது சந்தேகம் எழுந்தது
அவர்கள் கோயம்பேட்டில் இருந்து புனே நகருக்கு தனியார் பேருந்து மூலம் சென்றதும் தெரிய வந்தது.
இவர்களைத் தேடும் பணியில் உதவி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் ராஜ்குமார், காவலர்கள் முகமது, கௌரிசங்கர், யாஹியா ஆகிய 4 பேரும் விமானத்தில் ராஜஸ்தான் ஜோத்பூர் சென்றனர்.
அங்கு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு, பில்லாடா பகுதிக்கு சென்று விசாரித்தனர். அந்த மூவரும் வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போது அதில் தயாள் பாகர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும், மகேஷ் சவுத்ரி புனேவில் இருப்பதும் தெரிய வந்தது
உடனடியாக வாடகை கார் மூலமாக ஜோத்பூரில் இருந்து அகமதாபாத்து க்கு சென்று தயாள் பாகரை கைது செய்தனர். பின்னர் புனேவுக்கு சென்று அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி யிருந்த மகேஷ் சவுத்ரியை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில் முக்கிய குற்றவாளியான ஷ்யாம் குஜ்ஜார் பற்றி அவர்கள் வாய் திறக்க வில்லை. அதே நேரம் ஷ்யாமின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போது, அவர் கோவாவில் இருப்பது தெரிய வந்தது
உடனடியாக, தயாள் பாகர், மகேஷ் சவுத்ரி உடன் போலீசார் காரில் கோவாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு இரண்டு நாள் தங்கி தேடி அலைந்த போது கடைசியாக கடற்கரையில் தனது மனைவியுடன் காற்று வாங்கிக் கொண்டிருந்த ஷ்யாம் குஜ்ஜார் சிக்கினார்
17 ம் தேதி கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
2017-ம் ஆண்டு கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் ஈடுபட்டு போலீசிடம் சிக்கியவர் பிரபல கொள்ளையன் நாதுராம்.
அவரைப் பிடிக்கச் சென்ற போது தான் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொள்ளையர் களால் சுட்டுக் கொல்லப் பட்டார்
அந்த நாதுராமிடம் சேர்ந்து உள்ளூரில் பல கொள்ளைகளில் பங்கேற்று பயிற்சி பெற்றுள்ளார் ஷ்யாம் குஜ்ஜார். அதன் பின்னர் 2014ம் ஆண்டு ஷ்யாம் குஜ்ஜார் தல்லாராமிடம் பணி யாற்றினார்;
சமீபத்தில் வேலை யிலிருந்து விலகி சொந்த ஊருக்கு சென்று விட்டார். தல்லாராமிடம் உள்ள பணத்தைக் கொள்ளை யடிக்க திட்டமிட்ட ஷ்யாம், தன்னுடன் தயாள் பாகர் மற்றும் மகேஷ் சவுத்ரி ஆகியோரை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்
மூவரும் பூக்கடையில் ஒரு தனியார் விடுதியில் கடந்த 6 ம் தேதி அறை எடுத்து தங்கி உள்ளனர். 7-ம் தேதி மூர் மார்க்கெட்டுக்கு சென்று கடையின் ஷட்டரை உடைப்பதற் கான கடப்பாரை, திருப்புளி கட்டர் ஆகியவற்றை வாங்கி வந்துள்ளனர்
எட்டாம் தேதி ஞாயிறு அன்று இரவு சரியாக 10 மணியளவில் கடையின் மொட்டை மாடிக்குச் சென்று பதுங்கி கொண் டுள்ளனர். 12 மணிக்கு தொடங்கிய கடைக் கதவின் உடைப்பு வேலை சரியாக நள்ளிரவு 2 மணியளவில் முடிந்துள்ளது.
அதன்பின் கடைக்குள் சென்ற மூவரும் லாக்கரை உடைத்து அதில் இருந்த 7 லட்சம் ரூபாயையும் பல லட்சம் மதிப்பிலான ஆடைகளையும் கொள்ளை யடித்து சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது
மேலும் காவல்துறை கண்டுபிடித்து விடாமல் இருப்பதற் காகவே ராஜஸ்தான், புனே, கோவாவுக்கு சென்றதும் தெரிய வந்தது.
கொள்ளை யடிக்கப்பட்ட பணத்தில் 4 லட்சம் ரூபாயை செலவு செய்து மூவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மூவரிடமிருந்தும் 3 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கடையை உடைப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
உயிரை பணையம் வைத்து குற்றவாளிகளை தேடி ஏழு நாட்களாக மூன்று மாநிலங்களில் சுற்றி 3 குற்றவாளி களை கைது செய்து வந்திருக்கின்றனர் சென்னை காவல் துறையினர்.
Thanks for Your Comments