சீஸ்டுசவால் பற்றி தெரியுமா? #CheesedChallenge

1 minute read
தினமும் புது புது சவால் என்ற பெயரில் பல சர்ச்சையான #சவால்கள் இணைய தளத்தில் பரவி வருகின்றன. தற்போது, அப்படி ஒன்றை #சீஸ்டுசவால் (#CheesedChallenge) என்ற பெயரில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
CheesedChallenge
இதில் சிறு குழந்தை களை நோக்கி சீஸ் துண்டுகளை வீசி, அதனை #சீஸ்டுசவால் என்ற பெயரில் இணைய தளவாசிகள் பரப்பி வருகின்றனர்.
என்பிசி நீயூஸ் பொறுத்த வரை, இந்த சவாலை உருவாக்கியது @unclehxlmes என்னும் ட்விட்டர்வாசி தான். 

அவர், தான் பதிவிட்ட வீடியோவை அழித்து விட்டாலும், அதற்கு முன்பே பல பேர் #சீஸ்டுசவால் என்ற பெயரில் இதனை வைரல் ஆக்கி யுள்ளனர்.

இந்த #சீஸ்டுசவால் -க்கு பலர் தங்களின் எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர். 

'இப்படி யொரு செயலை செய்வதும் இல்லாமல் அதனை ட்ரெண்டிங் வேற செய்கிறீர்களா?' என பலர் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி யுள்ளனர்.
'அந்த சிறு குழந்தைகளை மனசாட்சியே இல்லாமல் இப்படி கொடுமை படுத்த எப்படித் தான் மனது வந்ததோ' எனப் பலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள்ளனர்.
Tags:
Today | 30, March 2025
Privacy and cookie settings