திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பூமலூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கம்மாள் (வயது 75). தங்கம்மாள் (72). இருவரும் அக்காள் -தங்கை ஆவார்கள்.
இருவரது கணவர்களும் இறந்து விட்டனர். இதில் ரங்கம்மா ளுக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். தங்கம்மா ளுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.
இவர்களுக்கு திருமணம் நடந்து வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். இதனால் அக்காள், தங்கை இருவரும் பூமலூரில் வசித்து வருகின்றனர்.
அவர்களை அவ்வப்போது மகன்கள் கவனித்து வந்தனர். இந்த நிலையில் அக்காள் ரங்கம்மாள் காசநோயால் அவதிப்பட்டு வந்தார்.
அவரை மகன்கள் ஆஸ்பத்திரி க்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது ரங்கம்மாளை பரிசோதித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்கு பணம் அதிகம் செலவாகும் என்று கூறினார்கள்.
இதைத் தொடர்ந்து மூதாட்டிகள் இருவரும் மருத்துவ செலவுக்காக தாங்கள் சேமித்து வைத்து இருந்த பணத்தை மகன்களிடம் கொடுத்தனர்.
அவை அனைத்தும் பணமதிப்பிழக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் என தெரிந்து மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நீங்கள் சேர்த்து வைத்த பணம் அனைத்தும் செல்லாத நோட்டுகள் என மகன்கள் கூறினார்கள். இது பற்றி அறிந்த மூதாட்டிகள் வேதனை அடைந்தனர்.
ரங்கம்மாளிடம் ரூ.22 ஆயிரமும், தங்கம்மா ளிடம் ரூ.24 ஆயிரமும் என மொத்தம் ரூ.46 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தது குறிப்பிடத் தக்கது.
பல ஆண்டு களாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் தங்களுடைய மருத்துவ செலவுக்கு கூட கை கொடுக்க வில்லையே என வருத்தம் அடைந்தனர்.
மூதாட்டிகளிடம் 46 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. மூதாட்டிகள் சேமித்து வைத்திருந்த பழைய ரூ. 1000, 500 நோட்டுகள்
இதை அறிந்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டி களுக்கு உதவ முன் வந்தார்.
இதை யடுத்து நேற்று மூதாட்டிகள் ரங்கம்மாள், தங்கம்மாள் ஆகிய இருவரையும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத் துக்கு வரவழைத்தார்.
பின்னர் இருவருக்கும் முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
அதன் பிறகு காச நோயால் பாதிக்கப்பட்ட ரங்கம்மா ளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற் காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி டீனுக்கு பரிந்துரை கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்.
மூதாட்டிகளின் செல்லாத நோட்டுகள் மாற்றப்படுமா? என்பது குறித்து முன்னோடி வங்கி மேலாளர் சத்திய மூர்த்தி கூறும் போது,
“மூதாட்டிகள் செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி களிடம் கலந்து ஆலோசித்தோம்.
அவர்கள் இனிமேல் பணமதிப் பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்றனர். ஆதலால் மூதாட்டி ளிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது” என்றார்
Thanks for Your Comments