கங்கையை பார்வையிட சென்ற போது தடுமாறி விழுந்த மோடி !

0
பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே வேகமாக நடக்கும் பழக்கம் கொண்டவர். படு சுறுசுறுப்பானவர். ஆனால் இன்று படிக்கட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.
தடுமாறி விழுந்த மோடி


நாட்டின் புனித நதிகளில் ஒன்றாக கருதப்படும் கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக தேசிய கங்கை நதி கவுன்சில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் ஆலோசனைக் கூட்டம் இன்று கான்பூரில் நடந்தது. 

இதில் கலந்து கொள்வதற்காக கான்பூர் வந்திருந்தார் பிரதமர் மோடி. அவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக் கூட்டத்தில் கங்கையை சுத்தப் படுத்தும் பணி எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.

அதன் பின்னர் கங்கை நதியை சுத்தப் படுத்தும் பணியைப் பார்வை யிடுவதற்காக மோடி உள்ளிட்டோர் சென்றனர். 


அப்போது கங்கை நதிக் கரைக்கு செல்வதற்காக படிகளில் வேகமாக ஏறி நடந்தார் பிரதமர் மோடி. அவரை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர்.

அங்கிருந்த படிகளில் ஒன்று மட்டும் கொஞ்சம் உயரமாக இருந்தது. அதில் ஒரு பாதுகாப்பு வீரர் லேசாக தடுக்கி சென்றார். 

அவருக்கு பின்னாடியே வந்த பிரதமர் மோடியும், அந்த படிக்கட்டை தாண்டும்போது கால் தடுமாறி இடறி கீழே விழுந்து விட்டார்.

இதைப் பார்த்து அனைவரும் பதறிப் போனார்கள். உடனடியாக பிரதமரின் மெய்க்காப்பா ளர்கள் பிரதமரை தூக்கி விட்டனர்.

நல்ல வேளையாக பிரதமருக்கு பெரிதாக அடி படவில்லை. இந்த சம்பவம் அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings