மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதி லிருந்தே இந்தியா முழுவதும் அதற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2015-ம் ஆண்டு தொடங்கிய என்.ஆர்.சி பணி பெரும் குழப்பங்களை விளை வித்துள்ளது.
வடகிழக்கில் தொடங்கிய போராட்டங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கின.
ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற காவல் துறையின் செயல்கள் போராட்டத்தை மேலும் தீவிரப் படுத்தியது.
திரைத் துறை, கலைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்க ளுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கி யிருக்கின்றனர்.
தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன?
அஸ்ஸாமில் இது எவ்வாறு மேற்கொள்ளப் பட்டது? குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும் இதற்கும் உள்ள தொடர்பு பற்றியதே இந்தத் தொகுப்பு.
தகுதி வாய்ந்த பலரும் இறுதி என்.ஆர்.சி பட்டியலில் சேர்க்கப்பட வில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதின் அலி அகமதின் உறவினர்கள், முன்னாள் கார்கில் ராணுவ வீரர் எனப் பலரின் பெயர்களும் விடுபட்டது அதிர்வலை களை ஏற்படுத்தியது.
ஆறு ஆண்டுகள், 20,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் உழைப்பில் ரூ.1,200 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்ட
என்.ஆர்.சியை தற்போது நிராகரிக்க வேண்டும் என அஸ்ஸாம் மாநில அரசும், பா.ஜ.க-வும் கோரி வருகிறது.
அஸ்ஸாம் என்.ஆர்.சியிலே இத்தகைய குளறுபடிகள் ஓயாத நிலையில், இந்தியா முழுவதும் என்.ஆர்.சி கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாதொடர்ந்து கூறி வருகிறார்.
அதோடு புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டமும் இணைந்தால் குடியுரிமை இழப்பவர் களில் முஸ்லிம் அல்லாதவர்கள் குடியுரிமை பெற இயலும்.
முஸ்லிம்கள் இதனால் நேரடியாக பாதிக்கப் படுவார்கள் என கடும் எதிர்ப்புகள் இருந்து வருகின்றன... விகடன்...
தயவு செய்து இதை அனைவருக்கும் சேர் செய்யுங்கள். இது பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
தயவு செய்து இதை அனைவருக்கும் சேர் செய்யுங்கள். இது பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
Thanks for Your Comments