பூமியில் நடந்து செல்லக்கூடிய மிக நீண்ட தூரம் இது தான் !

0
உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும்பாலும் ஆன்மீக நோக்கங்களுக்காக நடைபயண யாத்திரை செல்கிறார்கள்.  நாகரீகம் வளர்ச்சி யடைவதற்கு முன்னால் மனிதன் அனைத்து இடங்களுக்கும் நடை பயணமாகவே சென்றான். 
பூமியில் நடந்து செல்லக்கூடிய மிக நீண்ட தூரம் இது தான் !
பின்னர் விலங்குகளை பயன்படுத்தி தான் நினைத்த இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தான். அதன் பின்னர் பிற தேசங்களுக்கு செல்ல கடற்பயணம் மேற்கொண்டான்.

நாகரீகம் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலத்தில், வாகனங்களின் பயன்பாடு அதிகம் உள்ளதால் கடைத் தெருவிற்கு கூட காரில் செல்லும் நபர்களும் உள்ளனர் எனலாம். 

அந்த அளவிற்கு போக்குவரத்து துறையில் உலகம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில், பூமியில் மிக நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய ஒற்றை தூரம் எவ்வளவு என்பதை கூகுள் மேப் மூலம் கணித்து சுவாரசியமாக பொறியியல் நிறுவனம் ஒன்று வெளியிட் டுள்ளது.

அதன்படி, தென் ஆப்பிரிக்க நாட்டின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசில் இருந்து வடக்கு ரஷியாவின் மகடான் நகர் வரை உள்ள தூரமே மனிதன் அதிக பட்சமாக நடந்து செல்லக் கூடியதாகும்.

மொத்தம் 14,334 ஆயிரம் மைல்கள் உடைய இந்த தூரத்தை கடக்க மூன்றாண்டுகள் ஆகும். இது பூமியின் மொத்த 24,901 மைல் சுற்றளவில் பாதிக்கும் மேலானது.

இந்த பயணத்தின் போது எந்த நிலையிலும் ஒரு ஆற்றின் குறுக்கே செல்ல ஒரு சிறிய படகையும் கூட நாம் பயன்படுத்த வேண்டிய தில்லை, ஏனென்றால் முழு வழியும் பாலங்களைக் கொண்ட சாலைகளால் ஆனது.

இந்த பயணத்தின் போது பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு, உயிர் பிழைப்பதற் கான பாதுகாப்பு உபகரணங் களை எடுத்து செல்ல வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விலங்குகள், காலநிலை ஆகியவை பிரச்சினைகள் ஆகும். ஜிம்பாப்வே வழியாக நடக்க வேண்டும், எடுத்துக் காட்டாக, இது 'பிளாக் மாம்பா'வின் தாயகமாகும். இது உலகின் கொடிய பாம்புகளில் ஒன்றாகும்.

உகாண்டாவில், உலகில் அதிக எண்ணிக்கை யிலான மலேரியா நோயாளிகள் உள்ள ஒரு நாடு வழியாக நீங்கள் பயணிக்க வேண்டும். நீங்கள் தெற்கு சூடானுக்குள் நுழையும் போது, உலகின் மூன்றாவது மிக ஆபத்தான நாடு வழியாகச் செல்வீர்கள்.

மேலும் வடக்கே, நீங்கள் சஹாராவைக் கடக்க வேண்டும், இது 116 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையை கொண்டது.

இதை யெல்லாம் கடந்தாலும் நீங்கள், போரினால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் ரஷ்யாவின் குளிர்காலம் உள்ளிட்ட பிற நாடுகள் மற்றும் தட்ப வெப்ப நிலைகள் வழியாக நீங்கள் இன்னும் பயணிக்க வேண்டி யிருக்கும்,
நேரத்தைப் பொறுத்தவரை, பயணத்தை மேற்கொள்ளு பவர்கள் தொடர்ச்சியாக இடை விடாது நடைப் பயணத்தை மேற்கொண்டால் 194 நாட்கள் ஆகும்.

ஒரு சாதாரண வேகத்தில் (சுமார் நாள் ஒன்றுக்கு 12.5 மைல்கள்) சென்றால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings