28 ஆண்டுகளாக நிமிராத லீ 4 அறுவை சிகிச்சைக்கு பிறகு !

0
மிகவும் அரிதான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுத் தண்டு முழுவதும் வளைந்த லீ என்பவர் 4 அறுவை சிகிச்சை களுக்குப் பிறகு மீண்டுள்ளார்.
28 ஆண்டுகளாக நிமிராத லீ 4 அறுவை சிகிச்சைக்கு பிறகு !


சீனாவில் கடந்த 28 ஆண்டுகளாக Ankylosing Spondylitis என்ற நோயால் பாதிக்கப் பட்டவர் லீ ஹுவா.

1991-ம் ஆண்டு அவரது முதுகுத் தண்டு வளையத் தொடங்கியது. 

தொடர்ந்து முதுகு வளைந்து கொண்டே போக, தற்போது அறுவை சிகிச்சைக்கு முன்பு வரை அவரது கால் மூட்டுக்கும், தலைக்கும் உள்ள இடைவேளை வெறும் 5 செ.மீ மட்டுமே.

மருத்துவர் களுக்கு மிகவும் சவாலாக இந்த சிகிச்சை இருந்த நிலையில், பல மருத்துவர்கள் லீக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். 

அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்ற பயத்தில் அவர்கள் சிகிச்சை அளிப்பதில் இருந்து விலகினர். 

மேலும், இந்த சிகிச்சை க்கு அதிகளவு பணம் தேவைப்படும் என்பதால் லீயின் குடும்பமும் பலரிடம் உதவி கோரியது.

சாப்பிடுவது, தூங்குவது என்று அன்றாட வேலைகள் செய்வதே லீக்கு மிகவும் சிரமமான நிலையில், அவரது தாய்தான் எல்லாமாகவும் இருந்துள்ளார். 


46 வயதான லீக்கு சிகிச்சை யளிக்க கடந்த மே மாதம் மருத்துவர் டோவ் ஹுரென் முன் வந்தார்.

மிகவும் சிக்கலான முறையில் இருந்த லீயின் முதுகுத் தண்டில் 4 அறுவை சிச்சைக்கள் மேற்கொள்ளப் பட்டன. 

சிகிச்சைக்குப் பின்னர் லீ நிமிர்ந்துள்ளார்.

உபகரணங்கள் உதவியுடன் தற்போது நடக்கும் லீ, விரைவில் யாருடைய உதவியும் இன்றி வெற்றி நடை போட முடியும் என்கிறார் மருத்துவர்.

“மருத்துவர் டோவ் இல்லாமல் இன்று எனக்கு விடிவு இல்லை. என்னைக் காப்பாற்றியவர். இரண்டாவது தாயாக இருந்தவர். அவருக்கு எப்போதும் என் நன்றிகள் இருக்கும்” என்று கண்ணீருடன் லீ கூறுகிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings