சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உள்ள கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்தது.
முதலில் இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட மக்கள்
அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியன் தெரிந்ததால் அதிர்ச்சி யுடன் கூடிய ஆச்சரியத்தில் உறைந்தனர்.
அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியன் தெரிந்ததால் அதிர்ச்சி யுடன் கூடிய ஆச்சரியத்தில் உறைந்தனர்.
சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும் போது வானில் இருக்கும் பனித் துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால்
இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இது போன்ற நிகழ்வு பனிப் பிரதேசத்தில் தான் தெரியும். இந்த முறை பனிப்பொழிவு குறைந்த ஜின்ஜியாங் மாகாணத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது அதிசயம் தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் நடந்த இந்த அரிய அதிசய நிகழ்வு தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டும் சீனாவில் உள்ள ஹெய்லாங் சியாங் மாகாணத்தில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டது. இதனை இரு காதுகளுடன் தோன்றிய சூரியன் என்று சீன மக்கள் வர்ணிக்கின்றனர்.
Thanks for Your Comments