மேட்டுப் பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள நடூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியில்
கடந்த 2-ம் தேதி அதிகாலை கனமழை காரணமாக 20 அடி உயர கருங்கல் சுவர் அருகில் இருந்த நான்கு வீடுகள் மீது இடிந்து விழுந்தது.
கடந்த 2-ம் தேதி அதிகாலை கனமழை காரணமாக 20 அடி உயர கருங்கல் சுவர் அருகில் இருந்த நான்கு வீடுகள் மீது இடிந்து விழுந்தது.
இதில் வீடுகளுக்குள் உறங்கி கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
நாடு முழுவதும் சோகத்தை ஏற்டுத்திய இந்நிகழ்விற்கு காரணமான வர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கை களை முன் வைத்து உயிரிழந்தவர் களின் உடல்கள் வைக்க பட்டிருந்த மேட்டுப் பாளையம் அரசு மருத்துவ மனையில் போராட்டம் நடத்தப்பட்டது.
உயிரிழப்பிற்கு காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரும் கைது செய்யப் பட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 20-ம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
அதனை தொடர்ந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்காத தால் சுயமரியாதை வேண்டி 3000 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக தமிழ் புலிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Thanks for Your Comments