பா.ஜ.க இழக்கும் ஐந்தாவது மாநிலம் - சரிவுக்கான பின்னணி?

0
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்கண்டிலும் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. நடப்பு ஆண்டில் பா.ஜ.க ஆட்சியை, இழக்கும் 5-வது மாநிலம் ஜார்கண்ட்.
பா.ஜ.க இழக்கும் ஐந்தாவது மாநிலம்


2017- ஆம் ஆண்டில் மொத்த இந்தியாவில் 71 சதவிகித மக்களை ஆண்டு கொண்டிருந்தது பாஜக. இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் அதன் சாம்ராஜ்யம் வெறும் 40 சதவிகிதமாக சரிந்துள்ளது. 

2014- ஆம் ஆண்டில் பா.ஜ.க வசம் வெறும் 7 மாநிலங்களே இருந்தன. அதுவே 2018-ஆம் ஆண்டில் 21 - ஆக அதிகரித்தது.

2014- ஆம் ஆண்டு குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. 

2018- ஆம் ஆண்டில் பாஜக, கால் பதிக்காத மாநிலங்கள் என்றால் அவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மிசோராம், பஞ்சாப், ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா மட்டுமே.

2014- ஆம் ஆண்டில், 7 மாநிலங்களில் இருந்த பாஜக ஆட்சி, 2015-ல் 13 ஆக வளர்ச்சி யடைந்தது. இதுவே 2016-ல் 15 ஆகவும், 2017-ல் 19 ஆகவும் அதிகரித்தது. 

உச்சக் கட்டமாக, 2018- ஆம் ஆண்டு 21 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி விரிந்து பரந்தது. இதுவே அக்கட்சிக்கு முற்றாகவும் அமைந்தது.

தாமரை மலரவே மலராது என நினைத்திருந்த மிசோராமில் வெற்றி கனியை பறித்த பாஜக, அதன் கோட்டையாக கருதப்பட்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தோல்வி யடைந்தது.


ஆந்திராவை ஆண்டு கொண்டிருந்த தெலுங்கு தேசம், கூட்டணி யிலிருந்து வெளியேற, ஜம்மு காஷ்மீர், குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 

2019- ஆம் ஆண்டும் பா.ஜ.கவுக்கு ராசியான ஆண்டாக இருக்க வில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தும் மாநிலங்க ளுக்கான சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும் சறுக்கலையே சந்தித்தது.

கர்நாடகாவில், காங்கிரஸ் ஜனதா தள கூட்டணி ஆட்சியை உடைத்து எடியுரப்பா தலைமையில் அரசு அமைக்கப் பட்டது. 

இதே போன்ற ஒரு சூழலை மகாராஷ்டிராவில் ஏற்படுத்த திட்டமிட்டு தோல்வியை தழுவியது. மகாராஷ்டிரா தோல்வியைத் தொடர்ந்து, ஜார்கண்டிலும் ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது 

பா.ஜ.க. கடந்த 12 மாதங்களில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பிடியிலிருந்து நழுவி சென்றுள்ளன. 

ஹரியானாவில் மட்டும், துஷ்யந்த் சவுதாலாவுடன் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்ததால், அங்கு மட்டும் ஆட்சியை பிடித்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings