ஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. பொதுவாக விக்கல் வந்தால், நாம் அந்த விக்கலை நிறுத்த பயமுறு த்துவோம். ஆனால் அனைத்து நேரங் களிலும் இது வேலை செய்யும் என்று நம்ப முடியாது.
உங்களுக்கு விக்கல் அடிக்கடி வருமா? அதை எப்படி நொடியில் நிறுத்துவது என்று தெரிய வில்லையா?
உங்களுக்கு விக்கல் அடிக்கடி வருமா? அதை எப்படி நொடியில் நிறுத்துவது என்று தெரிய வில்லையா?
அப்படி யெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும்.
சரி, இப்போது விக்கல் வரும் போது அதை நொடியில் எப்படி நிறுத்துவது எனக் காண்போம். அதைப் படித்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.
குளிர்ந்த நீர்
விக்கல் எடுக்கின்றது என்றால் எவ்வளவு சீக்கிரம் உங்களால் தண்ணீர் குடிக்க முடியுமா குடியுங்கள். இது நமது உடலின் செயலில் ஒரு அதிர்ச் சியை ஏற்படுத்தும். அதனால் விக்கல் உடனே நின்று விடும்.
தேன் கலந்த நீர்
ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த நீரை நேரடியாக தொண்டை யில் படும் படி ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் விக்கல் உடனே நின்று விடும்.
ஐஸ் கட்டி
விக்கல் எடுத்தால் ஒரு சிறிய ஐஸ் கட்டியை வாயில் போட்டு சில நிமிடத் திற்கு அதை வைத் திருக்க வேண்டும். இதை செய்தால் விக்கல் உடனே நின்று விடும்.
வாய் கொப்பளித்தல்
விக்கல் எடுக்கும் போது குளிர்ந்த நீரினால் வாயை சில நிமிடத் திற்கு கொப்பளிக்க வேண்டும். இதனால் விக்கல் உடனே நின்று விடும்.
சர்க்கரை
விக்கல் வரும் போது ஒரு டீஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு சில நொடிகள் கரையும் வரை வைத்தி ருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் விக்கலை நொடியில் நிறுத்தலாம்.
வேர்க்கடலை வெண்ணெய்
1 டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயை வாயில் சில நொடிகள் வைத்தி ருப்பதால், இது சுவாசிக்கும் சுழற்சியில் இடை யூறை ஏற்படுத்தி, விக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை நரம்பு களைத் தூண்டி விட்டு, விக்கலில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு எலுமிச் சையை பிழிந்து சாறு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க, நொடியில் விக்கல் நின்று விடும்.
ஏலக்காய்
விக்கல் வரும் போது, ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் ஏலக்காய் தசைகளை ரிலாக்ஸ் அடைய செய்து, விக்கலைத் தடுக்கும்.