கோவை செட்டிபாளையம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா (42). இவர் தன் உறவினர் பெண்ணான பார்வதி யிடம் ஒன்றரை லட்சம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால், பார்வதி பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதை யடுத்து, பார்வதியைப் பழி வாங்கு வதற்கு சகுந்தலா திட்டம் போட்டுள்ளார்.
இதற்காக, தமிழக துணை முதல்வர் அலுவலக த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சகுந்தலா,
இதற்காக, தமிழக துணை முதல்வர் அலுவலக த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சகுந்தலா,
தனது உறவினர் பெண் பார்வதி பெயரில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இல்லங்களில்
மனித வெடிகுண்டு ஆட்களை வைத்திருப்ப தாகவும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மனித வெடிகுண்டு ஆட்களை வைத்திருப்ப தாகவும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதை யடுத்து செல்போன் எண்களை ஆராய்ந்த சைபர் கிரைம் போலீஸார், செட்டிபாளையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், பார்வதியிடம் விசாரணை நடத்தி யுள்ளனர்.
அப்போது, பணம் தராததால் தனது பெயரில் சகுந்தலா இவ்வாறு மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித் துள்ளார்.
பார்வதி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார், சகுந்தலாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பார்வதி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார், சகுந்தலாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
சகுந்தலா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறை யிலடைத்தனர்.
கைது செய்யப் பட்டுள்ள சகுந்தலா, 1993 -2005 வரை அ.தி.மு.க-வில் பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றிய மகளிரணி தலைவி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால், சமீப காலமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப் பட்டிருப்ப தாகவும் கூறப்படு கிறது.
Thanks for Your Comments