குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை நடைபெற இருக்கும் பேரணி குறித்து மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலான எதிர்க் கட்சிகள் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திரு க்கும் நிலையில் தி.மு.க தலைமையில் நாளை குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி நடைபெறுகிறது.
இந்தப் பேரணி குறித்து ட்வீட் செய்திருக்கும் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாளை (டிச-23) நடைபெறும் பேரணியில்,
அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இளைஞர்கள், மாணவர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பீர்.
சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் - ஈழத் தமிழர் உரிமைகள் மீட்சி பெறட்டும்” என்று கூறியுள்ளார்.
#CAA2019 சட்டத்திற்கு எதிராக, நாளை (டிச-23) நடைபெறும் பேரணியில், அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இளைஞர்கள், மாணவர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பீர்.— M.K.Stalin (@mkstalin) December 22, 2019
சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் - ஈழத் தமிழர் உரிமைகள் மீட்சி பெறட்டும்! pic.twitter.com/cON4JIVEbY
மேலும் திமுக தொண்டர் களுக்கு இப்பேரணி குறித்து கடிதம் ஒன்றையும் அவர் எழுதி யுள்ளார்.
Thanks for Your Comments